(இராஜதுரை ஹஷான்)
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்து அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க எதிர்தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.
இச்சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டும் விடயங்களை முழுமையாக செயற்படுத்துவோம். நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுப்பெற்றுள்ளன. மிலேச்சத்தனமான இத்தாக்குதலுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் அரச தலைவர்கள் மாத்திரமல்ல ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்பு கூற வேண்டும்.
நல்லாட்சியின் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் இன்று எதிர்கட்சியினராக உள்ளார்கள். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்திற்கும், தமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை போன்று தற்போது செயற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கங்களின் பெரும்பாலான விடயங்கள் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளன.
குண்டுத்தாக்குதலுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புக் கொண்டவர்கள் நாளாந்தம் கைது செய்யப்படுகிறார்கள். விசாரணை நடவடிக்கைகள் அரசியல் தலையீடு இல்லாமல் முன்னெடுக்கப்படுகிறது.. குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்த உரிய நடவடிக்கை சட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.
பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் எதிர் தரப்பினர் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்து அரசியல் இலாபம் தேடிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். நாட்டின் இறையான்மைக்க பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுப்பட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது.
கொழும்புதுறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் அரசியமைப்பிற்கு முரணல்ல என சட்டமாதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். இதன் பின்னரே சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கல் பரிசீலனை செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. சட்டமுலம் குறித்து உயர் நீதிமன்றம் எடுக்கும் தீர்மானத்தை முறையாக செயற்படுத்துவோம்.
கொழும்பு துறைமுக நகரம் சீன காலணித்துவ ஆட்சிக்குள் கொண்டு வரப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
சட்டமூலத்தில் எவ்விடத்திலும் சீன காலணித்துவ ஆட்சி மற்றும் அதன் அம்சங்கள் என எவையும் குறிப்பிடப்படவில்லை. வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் புதிய பல திட்டங்கள் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM