(எம்.எம்.சில்வெஸ்டர் )

சுப்பர் லீக் கால்பந்தாட்டத்  தொடரின் சீ ஹோக்ஸ் மற்றும் புளு ஈகள்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டதுடன், இப்போட்டியை இன்றைய தினம் மாலை 5 மணிக்கு மீண்டும் தொடர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நேற்றைய தினம் (20) நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதி நிறைவடைந்த நிலையில், அடைமழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது. முதல்பாதியின்போது இரண்டு அணிகளும் கோல்  அடிக்காத காரணத்தால், இரு அணிகளுக்குமே இப்போட்டியைத் தொடர் செய்வதில் எந்த சிக்கல்களும் இருக்காது என கால்பந்தாட்ட  அவதானிகள் தெரிவிக்கின்றனர். ஆகவே, இப்போட்டியில் வெற்றி பெற இரண்டு அணிகளும் முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இது இவ்வாறிருக்க, இப்போட்டிக்கு முன்பதாக நேற்றைய தினம் (20) மாலை 4.30 மணிக்கு ஆரம்பமான டிபெண்டர்ஸ் அணிக்கும், ரினோன் அணிக்கும் இடையிலான போட்டியில் இரண்டு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இப்போட்டி 0க்கு 0 என்ற கணக்கில் சமநிலையில் நிவைடைந்தது.

இதேவேளை, சுப்பர் லீக் தொடரின் 2 ஆவது போட்டியாக நடத்தப்பட்ட புளு ஸ்டார் அணிக்கெதிரான போட்டியில் ரெட் ஸ்டார் அணி 4க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டித் தொடரின் 5 ஆவது போட்டியில் ரட்ணம் விளையாட்டுக் கழகத்ததை அப் கன்ட்றி லயன்ஸ் கழகம் சந்திக்கவுள்ளது. இப்போட்டியானது இன்றிரவு 7.15 மணிக்கு ஆரம்பமாகும்.

சுப்பர் லீக் தொடரின் இதுவரையான போட்டி முடிவுகள் விபரம்

கொழும்பு எப்.சி. எதிர் நியூ யங்ஸ் 4-0                                     

ரெட் ஸ்டார் எதிர் புளு ஸ்டார்   4-2            

டிபெண்டர்ஸ் எதிர் ரினோன்  0-0