இயலாமையை மறைக்கவே மே தினக்கூட்டங்களை அரசாங்கம் இரத்துச்செய்தது - சமன் ரத்னப்பிரிய

Published By: Digital Desk 4

21 Apr, 2021 | 03:35 PM
image

(நா.தனுஜா)

மேதினத்தன்று அரசாங்கத்தினால் அதன் அனைத்துக் கூட்டணிக்கட்சிகளையும் ஒன்றிணைக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அநேகமான கட்சிகள் தனித்து மேதினக்கூட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. ஆகவே அரசாங்கம் தமது இயலாமையை மறைப்பதற்காகவே மே தினக்கூட்டங்களை இரத்துச்செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சமன் ரத்னப்ரிய தெரிவித்தார்.

சமன் ரத்னப்பிரிய சில்வா பாராளுமன்ற உறுப்பினராக எதிர்வரும் 05ஆம் திகதி  சத்தியப்பிரமாணம் | Virakesari.lk

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

அனைத்துக் கட்சிகளினதும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் இம்முறை மே தினக்கூட்டங்களை இரத்துச்செய்வதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலந்துரையாடுவதற்காக நேற்று கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கூட்டமொன்று நடைபெற்றது. எனினும் அதன்போது எமது கட்சியின் மே தினக்கூட்டத்தை இரத்துச்செய்வதற்கு நாம் உடன்படவில்லை.

இதுவிடயத்தில் தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் நிலைவரத்தைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என்று கட்சித்தலைவர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

முன்னர் மே தினக்கூட்டத்தை ஹைட்பார்க் மைதானத்தில் நடத்தவதற்குத் திட்டமிட்டிருந்தோம். எனினும் தற்போது அதற்குப் பதிலாக கட்சித்தலைமையகமான சிறிகொத்தாவிலேயே மே தினநிகழ்வுகளை நடத்தத் தீர்மானித்துள்ளோம். மாறாக அவற்றை இரத்துச்செய்வதற்கு நாம் உடன்படிவில்லை.

மேதினம் என்பது தொழிலாளர்களின் உரிமைகளைப் பறைசாற்றும் நாளாகும். தொழில்புரியும் வர்க்கத்தினர் பல்வேறு போராட்டங்களின் பின்னரே தமது உரிமைக்கான நாளாக மே முதலாம் திகதியைப் பிரகடனப்படுத்தினர்.

எனவே அதனைப் பிரதிபலிக்கும் நிகழ்வுகளை இரத்துச்செய்வதை அனுமதிக்கமுடியாது. முன்னர் ஒருமுறை போரைக் காரணமாகக்கூறி ராஜபக்ஷ அரசாங்கம் மேதின பேரணிகளை இரத்துச்செய்தது. எனினும் அப்போதும் நாம் கொம்பனி வீதியில் எமது கூட்டத்தை நடத்தியிருந்தோம்.

மேதினத்தன்று அரசாங்கத்தினால் அதன் அனைத்துக் கூட்டணிக்கட்சிகளையும் ஒன்றிணைக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அநேகமான கட்சிகள் தனித்து மேதினக்கூட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.

ஆகவே அரசாங்கம் தமது இயலாமையை மறைப்பதற்காகவே மே தினக்கூட்டங்களை இரத்துச்செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் கொத்தணிகள் மீண்டும் உருவாகலாம் என்பதால் கூட்டங்களை இரத்துச்செய்வதாக அரசாங்கம் கூறுகின்றது. அவ்வாறெனில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை இனங்காண்பதற்காக முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். எனினும் அதற்குரிய நடவடிக்கைகள் எதனையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

அதேபோன்று தமிழ், சிங்கள புதுவருடத்தின் போது நாடளாவிய ரீதியில் அனைத்து மக்களும் அதனை வழமைபோன்று கொண்டாடினார்கள்.

அதற்கு அரசாங்கம் எவ்வித தடையையோ அல்லது வரையறைகளையோ விதிக்கவில்லை. அவ்வாறெனின் தற்போது மே தினக்கூட்டங்களுக்கு மாத்திரம் தடை விதிக்கவேண்டியதன் அவசியமென்ன? ஆகவே அரசாங்கம் கூறுகின்ற காரணங்களை நியாயப்படும் வகையில் அதன் செயற்பாடுகள் இல்லை என்று குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11