சவுதி அரேபிய சிறைகளிலுள்ள இலங்கை பெண்களை அழைத்துவர நடவடிக்கை

Published By: Vishnu

21 Apr, 2021 | 12:15 PM
image

சவுதி அரேபியாவின் சிறைகளிலும், தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்ட இலங்கை பெண்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் சவுதி அரசாங்கங்களுக்கிடையேயான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இலங்கை பெண்களை சிறைகளில் விடுவித்து அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப சவுதி அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதன்படி சவுதி எயர்லைன்ஸ் மூலம் அவர்களை இலங்கைக்கு அனுப்ப சவுதி அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

அதேநேரம் இலங்கையில் சவுதி அரேபிய விமானம் தரையிறங்க அனுமதிக்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா மற்றும் விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறினார். 

இதேவேளை சர்வதேச மன்னிப்புச் சபை கடந்த வாரம் குறைந்தது 41 இலங்கை பெண்கள், சவுதி அரேபியாவில் உள்ள நாடுகடத்தல் மையத்தில் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டு, தங்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக காத்திருக்கிறார்கள் கூறியது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டுப் பணிப்பெண்களாக சவுதி அரேபியாவுக்கு சென்றவர்கள் ஆவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது...

2026-07-19 20:31:38
news-image

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை...

2026-07-19 20:19:28
news-image

அனுமதிப் பத்திரமின்றி 1000 பஸ்கள் சேவையில்...

2026-07-19 15:59:20
news-image

ஒக்டோபர் 8 முதல் துவாய்கள், நெப்கின்களுக்கு...

2026-07-19 19:50:35
news-image

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50...

2026-07-19 18:52:55
news-image

விற்பனைக்கான மோட்டார் சைக்கிள்களை ஓடிப்பார்ப்பதாகக் கூறி...

2026-07-19 17:54:15
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பு முயற்சியை கைவிட...

2026-07-19 17:44:06
news-image

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்...

2026-07-19 17:32:33
news-image

18 கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன்...

2026-07-19 17:29:40
news-image

தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்தில்...

2026-07-19 17:25:55
news-image

அரச பாடசாலை கட்டிடங்களுடன் இணைந்ததாக முன்பள்ளிகளை...

2026-07-19 16:51:27
news-image

செம்மணி புதைகுழிக்குள் உட்கார்ந்த நிலையில் என்பு...

2026-07-19 16:47:25