இந்தியாவில் கடந்த 24 மணிநேரப் பகுதியில் சுமார் 3 இலட்சம் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அந் நாட்டு மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

அதன்படி இந்தியாவில் செவ்வாய்க்கிழமை 2,95,041 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 2,023 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட முதல் 10 மாநிலங்கள்:

 • மகாராஷ்டிரா - 62,097
 • உத்தரப் பிரதேஷ் - 29,574 
 • டெல்லி - 28,395 
 • கர்நாடகா - 21,794 
 • கேரளா - 19,577 
 • சத்தீஸ்கர் - 15,625 
 • மத்திய பிரதேஷ் - 12,727 
 • குஜராத் - 12,206 
 • ராஜஸ்தான் - 12,201 
 • தமிழ்நாடு - 10,986 

 

இந்தியாவின் தற்போதைய கொவிட்-19 நிலவரம்:

 • மொத்த நோயாளர்கள் - 1,56,16,130
 • குணமடைந்தோர் - 1,32,76,039
 • உயிரிழப்புகள் - 1,82,553
 • சிகிச்சை பெறுவோர் - 21,57,538
 • தடுப்பூசி பெற்றுக் கொண்டோர் - 13,01,19,310