சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்று காலை 10.00 மணிக்கு கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் நடைபெறும் இந்த தொடரில் இரு அணியினரும் பட்டியல் தரவரிசையில் முன்னேற்றம் அடைவதை நோக்காக கொண்டு ஒருவருடன் ஒருவர் மல்லுக்கட்டவுள்ளனர்.

தற்சமயம் உலக டெஷ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியிலில் இலங்கை 120 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், பங்களாதேஷ் எதுவித புள்ளிகளின்றி ஒன்பதாவது இடத்திலும் உள்ளது.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவுசெய்வதற்காக பங்களாதேஷ் இலங்கைக்கு வந்துள்ளது. அவர்கள் இலங்கைக்கு எதிராக விளையாடிய ஒன்பது தொடர்களில் எட்டில் தோல்விகளை சந்தித்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் இலங்கையில் இறுதியாக டெஸ்ட் விளையாடியபோது, தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை அடைந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த இரு தரப்பினரும் இறுதியாக சந்தித்தது 2018 ஆம் ஆண்டு பங்களாதேஷில். இதன்போது இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை 1-0 என்ற கணக்கில் வென்றது.

இந்த நேரத்தில் அவர்கள் இந்த தொடரில் ஒரு சிறந்த பெறுபேற்றினை பெறுவார்கள் என்று எதிர்பார்த்துள்ளனர்.

இன்றைய போட்டிகளை கருத்திற் கொண்டு இரு அணிகளும் நேற்று (20) பல்லேகல மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டன. இலங்கை அணி காலையில் பயிற்சியை மேற்கொண்டதுடன், பங்களாதேஷ் அணி பிற்பகல் பயிற்சியில் ஈடுபட்டது.

இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இலங்கை அணிக்கு விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ஷ ஒப்புதல் அளித்துள்ளார்.

திமுத் கருணாரத்ன தலைமையிலான அணியில், மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது விலகிய அஞ்சலோ மெத்யூஸ் மற்றும் சுற்றுப்பயணத்தின் போது கொவிட் வைரஸால் பாதித்த வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரா ஆகியோர் அடங்குவர்.

இவர்கள் இருவரையும் தவிர, அணியில் புதிதாக வந்தவர் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜெயவிக்ரம மட்டுமே. 

உள்ளூர் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் 10 போட்டிகளில் மட்டுமே விளையாடிய 22 வயதான ஜெயவிக்ரம, போட்டிகளில் சராசரியாக 24.57 சராசரியுடன் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அண்மையில் முடிவடைந்த இன்டர்-கிளப் முன்னணி கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஏழு போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட காயம் காரணமாக பங்களாதேஷ் போட்டியில் இருந்து விலகிய லசித் எம்புல்தேனிய அணியில் இல்லை.

இலங்கையில் மட்டுமல்ல, உலகிலும் மிக அழகான சில மைதானங்களில் பல்லேகல மைதானமும் ஒன்றாகும். 2011 ஒருநாள் உலகக் கிண்ணத்துக்காக கட்டப்பட்ட பல்லேகல தைானம் இப்போது உலகின் மிகவும் பிரபலமான டெஸ்ட் கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாகும். 

ஆடுகளத்தின் தன்மை மற்றும் வேகம், இயற்கை அழகியலின் அடிப்படையில் மட்டுமல்லாமல், மற்ற பிட்ச்களிலிருந்து சற்று வித்தியாசமாகவும் இருப்பதால், வீரர்களில் ஆவலை அதிகரித்துள்ளது.

Fixtures

1st Test: 21 to 25 April, 10am at Pallekele Stadium

2nd Test: 29 April to 3 May, 10am at Pallekele Stadium

Squads

Sri Lanka: Dimuth Karunaratne (capt), Lahiru Thirimanne, Oshada Fernando, Angelo Mathews, Dinesh Chandimal, Pathum Nissanka, Dhananjaya De Silva, Niroshan Dickwella, Roshen Silva, Dasun Shanaka, Wanindu Hasaranga, Ramesh Mendis, Praveen Jayawickrama, Suranga Lakmal, Lahiru Kumara, Vishwa Fernando, Dilshan Madushanka, Asitha Fernando

Bangaldesh: Mominul Haque (capt), Liton Das, Mohammad Mithun, Mushfiqur Rahim, Tamim Iqbal, Shadman Islam, Abu Jayed, Taijul Islam, Najmul Hossain Shanto, Mehidy Hassan, Taskin Ahmed, Ebadat Hossain, Saif Hassan, Yasir Ali, Shoriful Islam