(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் சஹ்ரானின் மடிக்கணினி காணமால் போயுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் தனது இறுதி ஆறுமாத காலத்தில் தாக்குதலுடன் தொடர்புபட்ட சாட்சியங்கள் அனைத்தையும் அழித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா சபையில் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் நடத்திய பிரதான சூத்திரதாரி ஒருவர் இருப்பார் என்றால் அவரை நிச்சயமாக கண்டறிய நடவடிக்கை எடுப்போம். அதேபோல் மத்திய வங்கி ஊழல் வாதிகளுக்கும் விரைவில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை, வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் கீழான 5 ஒழுங்கு விதிகளும், மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு அறிவித்தல்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
ஈஸ்டர் தாக்குதலுக்கு ஹரின் பெர்னாண்டோ பிரதானமாக பொறுப்புக்கூறியாக வேண்டும், ஏனென்றால் இவ்வாறான தாக்குதல் நடத்தப்படப்போவதாக தெரிந்துகொண்ட ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவேயாவார்.
ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படுவதற்கு இடமளித்து, மக்கள் கொல்லப்படுவதற்கு இடமளித்து, பலர் காயமடைய இடமளித்தவர்கள் இன்று தாக்குதல் பிரதான சூத்திரதாரியை கைதுசெயயவில்லையா என கேட்கின்றனர்.
மத்திய வங்கியை கொள்ளையடிக்க அனுமதித்து, குற்றவாளியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்திவிட்டு மத்திய வங்கி ஊழலில் பிரதான குற்றவாளியை கைதுசெய்யவில்லையா என எம்மிடம் கேட்கின்றனர்.
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றவுடன் அன்றில் இருந்து நாம் ஆட்சிக்கு வரும் வரையில் ஆட்சியில் இருந்தவர்கள் ஏன் அன்றே பிரதான சூத்திரதாரியை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.
இன்று சபையில் கூறும் காரணிகளை ஏன் அன்றே கண்டறியவில்லை. ஐ.பி முகவரியில் கண்டறிய முடியும் என இன்று கூறும் நீங்கள் ஏன் அன்றே இதனை செய்யவில்லை. கத்தோலிக்க மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற வேண்டாம்.
கத்தோலிக்கர்கள் இறந்த நேரத்தில் கருப்பு சால்வை அணியாத ஹரின் பெர்னாண்டோ இன்று ரஞ்சன் ராமநாயகவிற்காக கருப்பு சால்வை அணிகின்றார்.
இது உண்மையான கத்தோலிக்கர் செய்யும் செயல் அல்ல. ரஞ்சன் ராமநாயகவை வைத்து அரசியல் செய்யவே இவர்கள் முயற்சிக்கின்றனர். உண்மையாகவே ரஞ்சன் ராமநாயக மீது கரிசனை இருந்திருந்தால் அவர் பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோய் சில மணிநேரங்களில் இன்னொருவரை நியமித்திருக்க மாட்டீர்கள். ஆகவே உங்களின் கீழ்த்தரமான செயலை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலில் இருந்தது, எனினும் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக் ஷாவின் ஆட்சியில் மிகக் குறுகிய காலத்தில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் எந்தவொரு அடிப்படைவாத, பயங்கரவாத அமைப்பிற்கும் இலங்கை மீது தாக்குதல் நடத்த முடியாது. மக்கள் எந்தவித அச்சமும் இல்லாது நடமாட முடிகின்றது.
அதேபோல் ஈஸ்டர் தாக்குதல் நடத்திய பிரதான சூத்திரதாரி ஒருவர் இருப்பார் என்றால் அவரை நிச்சயமாக கண்டறிய நடவடிக்கை எடுப்போம். ஆனால் சஹரானின் மடிக்கணினி காணமால் போயுள்ளது.
நல்லாட்சியின் இறுதி ஆறுமாத காலத்தில் சாட்சியங்கள் அனைத்தையும் அழித்துள்ளனர். எனவே மிகவும் கடினமாக நாம் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து பேசுவதற்கு ஹரின் பெர்னாண்டோவிற்கு எந்த தகுதியும் இல்லை, வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றால் பிணத்தையும் விற்கும் நபரே ஹரின்.
பதுளை மக்களை ஏமாற்றி வாக்குக் கேட்டு இறுதியாக மக்களையும் தனது குடும்பத்தையும் கைவிட்டு கொழும்பு வந்ததை போலவே இப்போது கம்பஹா மாவட்டத்தில் மக்களை ஏமாற்றும் வேலையை ஆரம்பித்துள்ளார். ரஞ்சன் ராமநாயகவின் வாக்குகளை கைப்பற்றும் முயற்சியே இவை அனைத்தும் எனவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM