(எம்.எம்.சில்வெஸ்டர்)

பண மழை பொழியும் சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடரின் ஆரம்பப்போட்டியில் நியூ யங்ஸ் அணியை எதிர்த்தாடிய கொழும்பு எப்.சி. அணி 4 க்கு 0 என்ற கோல் கணக்கில் இலகு வெற்றியை பதிவு செய்தது.

No description available.

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நேற்று (19) மாலை 4.30 மணிக்கு ஆரம்பமான போட்டியின் முதல் பாதியில் ஒரு கோலை மாத்திரம் அடித்த கொழும்பு எப்.சி. இரண்டாம் பாதியில் மூன்று கோல்களை அடித்து வெற்றியை உறுதி செய்தது.

கொழும்பு எப்.சி. சார்பில் சமோத் டில்ஷான் இரண்டு கோல்களையும் (15 ஆவது நிமிடம், 86 ஆவது நிமிடம் ) ஸர்வான் ஜொஹர் ( 53 ஆவது நிமிடம் ) , மோமொஸ் யாப்போ  (80 ஆவது நிமிடம் ) இருவரும் தலா ஒரு கோல்களை தமது அணிக்காக போட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.