கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு : அச்சம் கொள்ள வேண்டாம் - அரசாங்கம்

By T. Saranya

20 Apr, 2021 | 05:08 PM
image

(எம்.மனோசித்ரா)

புத்தாண்டின் பின்னர் நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது. எனினும் மக்கள் இது தொடர்பில் வீண் அச்சமடையத் தேவையில்லை. நிலைமை தீவிரமடையும் பட்சத்தில் சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளுக்கு அமைய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

புத்தாண்டின் பின்னர் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது. இது தொடர்பில் சுகாதார தரப்பு மற்றும் கொவிட் தடுப்பிற்கான தேசிய செயலணி உள்ளிட்டவற்றால் ஏற்கனவே மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன் போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் , துரதிஷ்டவசமாக மக்கள் அதன்படி செயற்படாதததை அவதானிக்க முடிந்தது.

எவ்வாறிருப்பினும் மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை. நாட்டில் முதலாம் , இரண்டாம் அலை ஏற்பட்ட போது சில நெருக்கடிகள் ஏற்பட்ட போதிலும் , சுகாதார அமைச்சு உள்ளிட்ட சகலரும் ஒன்றிணைந்து அதனை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியமையால் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடியதாக இருந்தது. எனவே வீண் அச்சமடையத் தேவையில்லை.

சுகாதார அமைச்சும் , அரசாங்கமும் இது தொடர்பில் மிக அவதானத்துடன் உள்ளது. இதனை நிலைமையை மேலும் தீவிரமடையாமல் அரசாங்கத்தால் தடுக்க முடியும். கொவிட் பரவல் அதிகமாகக் காணப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களில் இதுவரையில் சுமார் ஒரு மில்லியன் பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

எதிர்பாராதவிதமாக வைரஸ் தொற்று தீவிரமடைந்தால் சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமான் தூதரக அதிகாரி கொழும்பு விமானநிலையத்தில்...

2022-11-29 05:48:09
news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39