சப்ரகமுவ பல்கலைக்கத்தினுள் மாணவ நலன் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அதன் பொது மாணவ சங்க அமைப்பின் தலைவர் சமீர கப்புவத்த தெரிவித்துள்ளார்.

மாணவர் விடுதி, பரீட்சை பெறுபேறுகள் தாமதிக்கப்படல், மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் அங்கு நிலவுவதாக மாணவ சங்க அமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு குரல்கொடுக்கும் மாணவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகளும் இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.