இரண்டாவது வெற்றியும், இரண்டாவது தோல்வியும்

Published By: Vishnu

20 Apr, 2021 | 08:10 AM
image

ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

14 ஆவது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 12 ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸும், ராஜஸ்தான் ரோயல்ஸும் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணித் தலைவர் சஞ்சு சாம்சன் முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்ய, சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

ருதுராஜ் கெய்க்வாட்டும், டூப்பிளஸியும் தொடக்க வீரர்களாக அடியெடுத்து வைத்தனர். பவுண்டரியுடன் ஓட்ட கணக்கை ஆரம்பித்த சென்னை சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. 

அதன்படி ருதுராஜ் 10 ஓட்டங்களுடனும், ஜெய்தேவ் உனட்கட்டின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி அதிரடி காட்டிய டூப்பிளஸ்ஸி 33 ஓட்டங்களுடனும், சுரேஷ் ரய்னா 18 ஓட்டங்களுடனும், அம்பத்தி ராயுடு 27 ஓட்டங்களுடனும், தோனி 18 ஒட்டங்களுடனும், ஜடேஜா 8, சாம் கர்ரன் 13 ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதிகட்டத்தில் பிராவோவின் அதிரடியால் அணியின் ஓட்ட எண்ணிக்கை 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்களை குவித்தது. 

ஆடுகளத்தில் பிராவோ 8 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கலாக 20 ஓட்டங்களுடனும், தீபக் சாஹர் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சு சார்பில் ராஜஸ்தான் தரப்பில் சகாரியா 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளையும், முஸ்தாபிசூர் ரஹ்மான் மற்றும் ராகுல் திவாட்டியா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

189 ஓட்டம் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி துடுப்பெடுத்தாடியது.

தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் நிலைத்து நின்று ஆட மறுபக்கம் சென்னை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அவர்களின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. 

மனன் வோரா 14 ஓட்டங்களுடனும், சஞ்சு சாம்சன் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேற, ராஜஸ்தானின் நடுவரிசை வீரர்களில் துடுப்பாட்டத்தை சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான மொயீன் அலியும், ரவீந்திர ஜடோஜாவும் சீர்குலைத்தனர். 

ஜோஸ் பட்லர் 49 ஓட்டங்களுடனும், டேவிட் மில்லர் 2 ஓட்டங்களுடனும் இவர்களின் சுழலில் சிக்கி ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்களும் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து நடையை கட்டினர்.

இதனால் 20 ஓவர்கள் நிறைவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 45 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

சென்னை சார்பில் பந்து வீச்சில் மொயின் அலி 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகளையும், தாகூர் மற்றும் பிராவோ தலா  ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக மொயின் அலி தெரிவானார்.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியின் இரண்டாவது வெற்றி இது என்பதுடன், ராஜஸ்தானின் இரண்டாவது தோல்வியும் ஆகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமானது 15ஆவது இந்துக்களின்...

2026-03-13 15:07:11
news-image

15ஆவது இந்துக்களின் சமர்: யாழ். இந்துவின்...

2026-03-13 01:26:48
news-image

புனித அந்தோனியார் 157, திரித்துவம் 66...

2026-03-12 21:22:49
news-image

ஹார்மிஷன் துடுப்பாட்டத்திலும் ஆதித்தியா பந்துவீச்சிலும் அபாரம்;...

2026-03-12 20:22:39
news-image

149ஆவது நீல வர்ணங்களின் சமர்: ஜேடன்,...

2026-03-12 20:16:47
news-image

புனித பேதுருவானவர் றக்பி அணிக்கான ஜேர்சி...

2026-03-12 12:51:13
news-image

திரித்துவம் - புனித அந்தோனியார் மோதும்...

2026-03-12 10:28:56
news-image

109ஆவது பொன் அணிகளின் போர் கிரிக்கெட்டில் ...

2026-03-12 13:10:06
news-image

ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு...

2026-03-12 05:15:29
news-image

இலங்கைக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் வெள்ளைப் பந்து...

2026-03-11 16:30:26
news-image

டயலொக் ஜனாதிபதி கிண்ண நொக் அவுட்...

2026-03-10 15:09:09
news-image

இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக...

2026-03-09 19:42:23