இலங்கை அரசாங்கம் அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கான சர்வதேச சமூகத்தின் அழைப்பை மாகாண சபைகளுக்கான தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதன் மூலம் இந்தியா ஆதரிக்கிறது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் படி அனைத்து மாகாண சபைகளும் திறம்பட செயல்பட முடியும் என்பதை உறுதி செய்வதற்கான உறுதிப்பாட்டை இது உள்ளடக்கியது என்று ஜெய்சங்கர் அண்மையில் அ.தி.மு.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.தம்பிதுரைக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 23 ஆம் திகதி மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது தம்பிதுரை, ஈழத்தமிழர்களின் அதிகார பகிர்தலுக்கு உறுதி செய்ய அக்கரை செலுத்த வேண்டும். தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், இலங்கை அரசு சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார்.
இந் நிலையிலேய இது குறித்து இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தம்பிதுரை எம்பிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்த கடிதத்தில், இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட உறுதியான பயனுள்ள நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசுக்கு இந்தியா அறிவுறுத்தி இருக்கிறது.
இலங்கை அரசு தமிழர்களுடன் அதிகார பகிர்வை உறுதி செய்ய முன்னர் வாக்களித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். மாகாண சபை முழு சுதந்திரத்துடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இலங்கை அரசியல் சட்டத்தின் படி தமிழர்களுக்காக வழங்கப்படுவதாக வாக்களித்திருந்த அனைத்து அம்சங்களையும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை இலங்கை அரசுக்கு தெரிவிக்கின்ற வகையில் இந்திய அரசு தனது நிலைப்பாட்டினை அதிகாரபூர்வமாக வெளியுறவுத் துறைக்கு தெரிவித்து இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சர்வதேச தீர்மானத்தின் வாக்கெடுப்பினை இந்தியா புறக்கணித்தாலும் தனது நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக இந்திய அரசு விளக்கி இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழர்கள் கோரும் சமத்துவம், சம உரிமை, நீதி , நிலைத்த அமைதி, சமாதானம் குடிமக்களுக்கான தண்ணீர் ஆகியவற்றை தமிழர்களுக்கு உதவி செய்யும் வகையில் சர்வதேச நாடுகளுக்கும் முன்னர் அளித்த வாக்குறுதிகளின் படி ஒப்புறவு நடவடிக்கைகளில் இலங்கை அரசு அக்கறை காட்ட வேண்டும் என்பதையும் இந்தியா எழுத்துப்பூர்வமாக வலியுறுத்தி வாக்கெடுப்பு புறக்கணிப்புக்காண விளக்கத்தினையும் எழுத்துப்பூர்வமாக வைத்துள்ளதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM