இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் திங்களன்று கொச்சி கடற்பரப்பில் இலங்கை கப்பல் படகொன்றிலிருந்து சுமார் 340 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்துள்ளது.

இந்த கடத்தல் தொடர்பாக ஐந்து இலங்கை பிரஜைகளும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் ஈரானிய படகிலிருந்து இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட இலங்கை படகிற்கு கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஐந்து பேரின் ஆரம்ப விசாரணையில், இலங்கை படகு சிவப்பு நிற ஈரானிய படகில் இருந்து போதைப்பொருள் சரக்குகளை எடுத்ததாக என்.சி.பி. போதைப்பொருள் சரக்குகளின் நோக்கம் NCB தெளிவுபடுத்தவில்லை.

படகிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதியானது சர்வதேச சந்தையில் 1,750 கோடி இந்திய ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.