இந்திய குடியரசு தின விழாவை சிறப்பிக்க பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சன் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில், பிரித்தானியாவில் கொரோனா வைரசின் 2வது அலை ஆரம்பித்துள்ளதால், அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து எதிர்வரும் 25ஆம் திகதி பொரிஸ் ஜொன்சன் இந்தியா வருவார் என அறிவிக்கப்பட்டது. டெல்லி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்யும் அவர், தொழிலதிபர்களுடன் கலந்துரையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா வைரசின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருவதோடு, இந்தியாவில் இரட்டை மரபணு மாற்றமடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
இதனால் பிரதமர் பொரிஸ் ஜொன்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்யவேண்டும் என முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், இவ்யோசனை மற்றும் இந்தியாவில் உள்ள கொரோனா நிலவரத்தை பரிசீலனை செய்த பொரிஸ் ஜொன்சன், தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார்.
மேலும், எதிர்வரும் நாட்களில் இரு நாடுகளிடையே காணொளி வாயிலாக கூட்டம் நடத்தப்பட உள்ளதாக இருநாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM