இலங்கையர்கள் குறித்து தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரத்தை வெளிநாட்டவர்களுக்கு வழங்க முடியாது - பாக்கியசோதி

Published By: Digital Desk 4

19 Apr, 2021 | 09:07 PM
image

(நா.தனுஜா)

கொழும்பு துறைமுகநகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தின் ஊடாக துறைமுகநகர செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஆணைக்குழுவிற்கு வெளிநாட்டவர்களை நியமிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.

இலங்கை என்பது இறையாண்மை உடைய சுயாதீன நாடாகும். இங்கு வெளிநாட்டவர்கள் தாம் விரும்பியவாறு செயற்படுவதற்கும் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் அனுமதிக்கும் வகையிலான சட்டங்கள் உருவாக்கப்படக்கூடாது என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

தலதா மாளிகையில் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு: சிங்கள பௌத்த  பெரும்பான்மையினத்திற்கான ஒரு தெளிவான சமிக்ஞை -கலாநிதி பாக்கியசோதி ...

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுகநகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், அதற்கு எதிராக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையமும் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருக்கிறது. இந்நிலையில் இச்சட்டமூலம் குறித்து அதன் நிறைவேற்றுப்பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து மேலும் கூறியிருப்பதாவது:

தற்போது பல்வேறு தரப்பினரதும் மனுக்கள் மூலம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டிருக்கும் கொழும்பு துறைமுகநகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலமானது இந்நாட்டுமக்களின் இறைமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில் இது பிறிதொரு நாட்டிற்கான அரசியலமைப்பாகும். அதன்படி பொருளாதார ஆணைக்குழுவின் கீழ் துறைமுகநகர செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அந்த ஆணைக்குழு ஜனாதிபதியினாலோ அல்லது அவ்விவகாரத்திற்குப் பொறுப்பான அமைச்சரினாலோ நியமிக்கப்படும். எனவே இலங்கையர் அல்லாதோர் அந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் நீதியை நிலைநாட்டுவதற்குரிய கட்டமைப்பிற்கு வெளிநாட்டவர்களை நியமிக்கமுடியாதெனின், இதுவிடயத்தில் தீர்மானமெடுக்கும் அதிகாரம் வெளிநாட்டவர்களுக்கு எவ்வாறு வழங்கப்பட முடியும்? அத்தோடு இதன்விளைவாக இறையாண்மை பெரிதும் கேள்விக்குட்படுத்தப்படுகின்றது.

இலங்கையர்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட முடியாது. அதேபோன்று துறைமுகநகரத்தில் முன்னெடுக்கப்படும் வரிச்சலுகை முறைமைகளைப் பொறுத்தவரையில், அதனூடாக அரசாங்கம் எவ்வாறு பயனடைகின்றது?

ஆகவே நிர்வாகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய விடயங்களில் இந்த சட்டமூலம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இலங்கை என்பது இறையாண்மை உடைய சுயாதீன நாடாகும்.

இங்கு வெளிநாட்டவர்கள் தாம் விரும்பியவாறு செயற்படுவதற்கும் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் அனுமதிக்கும் வகையிலான சட்டங்கள் உருவாக்கப்படக்கூடாது. ஆகவே பொருளாதாரத்தை வலுப்படுத்தும் அதேவேளை நாட்டின் நிர்வாம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றையும் பாதுகாப்பது அவசியமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரத்தின் சில பகுதிகளில் 8 மணிநேர...

2024-11-14 13:28:31
news-image

கிளிநொச்சியில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

2024-11-14 13:22:10
news-image

பாராளுமன்றத் தேர்தல் 2024 : நண்பகல்...

2024-11-14 13:26:05
news-image

மன்னாரில் 6 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள்...

2024-11-14 13:05:52
news-image

யாழ்ப்பாணத்தில் சுமுகமாக நடைபெறும் வாக்களிப்பு

2024-11-14 13:08:46
news-image

வவுனியா நகர் எங்கும் வீசப்பட்டுள்ள கட்சி...

2024-11-14 12:46:59
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-11-14 12:47:24
news-image

திருகோணமலையில் சுமூகமாக நடைபெறும் வாக்களிப்பு

2024-11-14 12:13:23
news-image

வவுனியாவில் சுமூகமாக நடைபெறும் வாக்களிப்பு

2024-11-14 12:07:28
news-image

கொழும்பு வெள்ளவத்தையில் அமைதியான முறையில் மக்கள்...

2024-11-14 12:27:01
news-image

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,822...

2024-11-14 11:45:05
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்பு

2024-11-14 11:23:05