(எம்.எம்.சில்வெஸ்டர்)
ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.
கொழும்பு எப்.சி., டிபெண்டர்ஸ் எப்.சி., சீ ஹோக்ஸ், ரினோன் விளையாட்டுக் கழகம்., புளூ ஈகள்ஸ், புளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம், ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகம், ரட்ணம் விளையாட்டுக் கழகம், அப் கன்ட்ரி லயன்ஸ், வென்னப்புவ நியூ யங்ஸ் ஆகிய அழைக்கப்பட்ட 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை எதிர்த்தாடவுள்ளன.
பண மழை பொழியும் இப்போட்டித் தொடரில் சம்பியன் பட்டத்தை பெறும் அணிக்கு 50 இலட்சம் ரூபாவும், உப சம்பியன் அணிக்கு 35 இலட்சம் ரூபாவும், முன்றாம் இடம் பெறும் அணிக்கு 27.5 இலட்சம் ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்படும்.
ஏனைய இடங்களை பிடிக்கும் அணிகளுக்கும் பணப்பரிசு வழங்கப்படுகின்றமை விசேட அம்சமாகும். அதன்படி 4 ஆம் இடம் முதல் 10 இடம் வரையான அணிகளுக்கு முறையே 25 இலட்சம் ரூபாவும், 22.5 இலட்சம் ரூபாவும், 20 இலட்சம் ரூபாவும், 17.5 இலட்சம் ரூபாவும்,15 இலட்சம் ரூபாவும்,12.50 இலட்சம் ரூபாவும், 10 இலட்சம் ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்படவுள்ளன.
இன்று ஆரம்பமாகும் முதல் போட்டியில் கொழும்பு எப்.சி. அணி வென்னப்புவ நியூ யங்ஸ் அணியை எதிர்த்தாடவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM