நேபாளத்தில் உள்ள 8,091 மீற்றர் உயரமுள்ள அன்னபூர்ணா மலையில் ஏறும் முயற்சியில் ஈடுப்பட்ட மூன்று ரஷ்யர்களை  காணாமல் போயுள்ளார்கள்.

மலையில் ஏறியவர்களில்  செர்ஜி கோண்ட்ராஷ்கின், அலெக்சாண்டர் லூத்தோகின் மற்றும்  டிமிட்ரி சினேவ் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த மூன்று பேரையும் தேடும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இமயமலையில் உள்ள உயர்ந்த சிகரங்களில் ஒன்று அன்னபூர்ணா-1. நேபாளத்தில் அமைந்துள்ள இந்த சிகரம் 8 ஆயிரத்து 91 மீட்டர் உயரம் கொண்டது.

ஏப்ரல் 2020 இல், அன்னபூர்ணா பிராந்தியத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் இரண்டு தென் கொரிய மலையேற்ற வீரர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.