வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரா வெற்றிகரமாக முற்றுப்பெற்றமையினை அறிவிப்பதற்கான செய்தி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

உலகவாழ் பௌத்த மக்களின் பெருமதிப்பிற்குரிய கண்டி புனித தந்ததாதுவிற்காக வருடாந்தம் நடாத்தப்படும் எசல பெரஹரா இம்முறையும் வெகு விமர்சையாக நடாத்தி முடிக்கப்பட்டமைக்கான அறிவித்தலை சம்பிரதாயபூர்வமாக தியவடன நிலமே திலங்க தேல அவர்கள் நேற்று பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தார்.