டேபிள் மலையில் தீப்பரவல் ; வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்கள் அழிவு

Published By: Digital Desk 3

19 Apr, 2021 | 12:49 PM
image

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனிலுள்ள டேபிள் மலை தேசிய பூங்காவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த காட்டுத்தீ கேப் டவுன் பல்கலைக்கழக வளாகத்தில் பரவியுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

அரசியல்வாதியான சிசில் ரோட்ஸ் நினைவுச்சின்னம் அருகே நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக தீ விரைவாக பரவியயுள்ளது. இதனால் அங்கிருந்த உணவகமொன்று தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

பல்கலைக்கழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க நூலகம், மோஸ்டெர்ட்ஸ் காற்றாலை மற்றும் பிற கட்டிடங்களும் தீயினால் சேதமடைந்துள்ளன.

அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு காற்றில் கரும்புகை மற்றும் தூசுத்துகள்கள் வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறு கூறப்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் பணியில் நான்கு ஹெலிகொப்டர்கள் ஈடுபட்டுள்ளதோடு, 200 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்நிலையில், இரண்டு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

வரட்சி மற்றும் காய்ந்த புதர்கள் காரணமாக காட்டுத்தீ வேமாக பரவி வருகிறது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மூன்று நாட்கள் தேவைப்படும் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34