அரி­தாக ஏற்­படும் ஈரல் புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்டு பாட­சாலை செல்ல முடி­யாது மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள 10 வயது சிறுமி ஒருவர், ஐபாட் கணினி மூலம் கட்­டுப்­ப­டுத்­தப்­படும் ரோபோ­வொன்றை பாட­சா­லைக்கு அனுப்பி வகுப்­ப­றையில் நாளாந்த பாடங்­களை கற்கும் சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

அமெ­ரிக்க மேரி­லாண்ட்டைச் சேர்ந்த பைதன் வால்டன் என்ற சிறு­மியே இவ்­வாறு மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்­த­வாறு ரோபோ மூலம் நாளாந்த பாடங்­களைக் கற்று வரு­கிறார்..

பைதன் மருத்­து­வ­ம­னையில் இருந்­த­வாறு பேப்ஸ் என்ற மேற்­படி ரோபோ­வி­லுள்ள ஐபாட் கணி­னியை தன்­னி­ட­முள்ள பிறி­தொரு ஐபாட் கணினி மூலம் இயக்கி அந்த ரோபோவை கட்­டுப்­ப­டுத்தி வரு­கிறார்.

அவரால் இந்த முறை­மையைப் பயன்­ப­டுத்தி அந்த ரோபோவை பாட­சா­லை­யெங்கும் விரும்­பி­ய­வாறு நகர்த்த முடி­வது விசேட அம்­ச­மாகும்.

பைதனின் தாயா­ரான லைன் சேபரே தனது மகளின் கல்வி மீதான ஆர்­வத்தை பூர்த்தி செய்ய இவ்­வாறு ரோபோவை பாட­சா­லைக்கு அனுப்பும் திட்­டத்தை முன்­னெ­டுத்­துள்ளார்.

இது தொடர்பில் மொன்ட்­கொ­மெறி பூலெஸ்­வில்லே ஆரம்பப் பாட­சா­லையின் அதி­ப­ரான டக்ளஸ் ரொபின்ஸ் விப­ரிக்­கையில்,

பைத­னுக்குப் பதி­லாக ரோபோவை வகுப்­றையில் ஆஜராக்கும் திட்டம் குறித்து ஆரம்­பத்தில் அதிர்ச்சியடைந்ததாகவும் எனினும் தற்போது அந்த ரோபோவை மாணவர்கள் பைதனாகவே கருத ஆரம்பித் துள்ளதாகவும் கூறினார்.