நன்றி தெரிவித்தார் விவேக்கின் மனைவி

Published By: Gayathri

19 Apr, 2021 | 11:50 AM
image

நடிகர் விவேக்கின் மரணத்திற்கு மரியாதை செய்த மத்திய, மாநில அரசுகளுக்கும், இரசிகர்களுக்கும் மறைந்த நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி கொமடி நடிகர், குணச்சித்திர நடிகர், கதையின் நாயகன், சமூக ஆர்வலர், பசுமை சூழல் ஆர்வலர் என பன்முக திறமையுடன் வலம் வந்தவர் நடிகர் விவேக். 

மாரடைப்பின் காரணமாக அவர் கடந்த 17 ஆம் திகதியன்று உயிரிழந்தார். 

விருகம்பாக்கத்தில் அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு ஆயிரக்கணக்கான இரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் திரண்டு அஞ்சலி செலுத்தினர். அவருடைய உடல் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் விவேக்கின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அதன்போது விவேக்கின் மனைவி அருள்செல்வி, மகள்கள் அமிர்த நந்தினி, தேஜஸ்வினி, மைத்துனர் செல்வகுமார் உடனிருந்தனர்.

விவேக்கின் மனைவி அருள்செல்வி பேசுகையில்,

' எங்களுக்கு உற்ற துணையாக இருந்த மத்திய, மாநில அரசிற்கு நன்றி. அரசு மரியாதை அளித்தமைக்கு நன்றி. இறுதி வரை உடனிருந்த காவல்துறைக்கும், ஊடகத் துறைக்கும் நன்றி. இறுதி அஞ்சலியில் பங்குபற்றிய ஆயிரக்கணக்கான இரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்