கடந்தகால விடயங்கள் தொடர்பில்  மறைந்துகிடக்கும் உண்மைகள் கசப்பாகத்தான் இருக்கும். அவற்றோடு தான் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றோம். எனவே  அவற்றை கண்டறிய வேண்டிய கட்டாய  கடமை அரசாங்கத்தை சார்ந்துள்ளது. அதற்காகவே காணாமல் போனோர் அலுவலகம், உண்மையை கண்டறியும் ஆணைக்குழு என்பன உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

கொழும்பில்  நேற்று நடைபெற்ற சட்டக்கல்லூரியின் மனோராவ சஞ்சிகை வெளியிடுதல்   மற்றும் 2016 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் தின நிகழ்வில்    பிரதம விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர்  மேறக்ணடவாறு தெரிவித்தார்.

பிரதமர்   அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் 

மனித உரிமைகள் காலாகாலம் பல்வேறு பரிணாமங்களோடு வளர்ச்சியடைந்து வந்துள்ளன. ஆரம்பத்தில் மனிதர்கள் அடிமைகளாக கருதப்பட்டனர். அத்தோடு பெண்களும் தங்களது உரிமைகளை நிலைநாட்ட பல்வேறு சிரமங்களை அனுபவித்தனர். எனவே உரிமைகள் தொடர்பில் நாம் அனைவரும் தெளிவான விளக்கத்தினை கொண்டிருக்க வேண்டும்.  இதற்கு சட்டக்கல்லூரி போன்ற நிறுவனங்களின் பங்கு மிகவும் அவசியமானதாகும்.

நீதிமன்றம் பாராளுமன்றம் என ஒவ்வொரு நிறுவனங்களின் வளர்ச்சியும் வரலாற்றில் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப தோற்றம்  பெற்றன. இலங்கையில் 1971 ஆம் ஆண்டு கலவரம் மற்றும் 1980 ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் வடக்கில் ஏற்பட்ட இன்னுமொரு கலவரம் என்பன மனித உரிமைகள் மீறலுக்கான சிறந்த எடுத்துக்காட்டாகவே அமைந்தன. 

1990 மற்றும் 91 ஆம் ஆண்டுகளில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வடக்கிலும் தெற்கிலும் வேறுபட்ட கருத்தாடல்கள் காணப்பட்டன. ஜெனீவாவிற்கு சென்று எமது நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டியிருந்தது. எனது நெருங்கிய நண்பர்கள் சிலரே ஐ.நா.விற்கு சென்று மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பில் விவாதித்தார்கள். 

உதாரணமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கூறலாம். வடக்கு மற்றும் கிழக்கில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் காரணமாக  கலவரங்கள் தோற்றம் பெற்றன. மக்கள் விடுதலை முன்னணி தரப்பிலும் சிலர் கொல்லப்பட்டனர்.  வடக்கு கிழக்கிலும் சிலர் கொல்லப்பட்டனர்.  இதனையெல்லாம் மறைப்பதற்கில்லை. நாம் அவ்வாறான விடயங்களுக்கு அரசாங்கம் என்ற வகையில் பொறுப்பு கூற வேண்டும்.

யுத்தம் ஒன்று இருக்கும் போதும் முரண்பாடு ஒன்று ஏற்படும் போதும் மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கும். இது அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது. இதனை பற்றி நாம் கலந்துரையாட வேண்டும். அதேநேரம் அவற்றை யாரும் மறுக்கவும் முடியாது. அதிகமான நீதிமன்ற வழக்குகளும் பதிவாகியுள்ளன. யுத்தகாலத்தின் போது ஏற்பட்ட உரிமை மீறல்களை மறைக்க முடியாது.  அதற் எதிராக பல்வேறு முறைபாடுகள் உள்ளன. சிலர் வெள்ளைக்கொடி ஏந்தி வந்ததாகவும் பாரிய உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும் குற்றம் சுமத்துகின்றனர். அதற்கு எதிராக வழக்குகளும் நிலுவையில் உள்ளன. 

இந்நிலையிலேயே  பரணகம ஆணைக்குழு நியமிக்கப்பட்ட போது   அவ்வறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்றும் கடந்த அரசாங்கம் கூறியது. இருப்பினும் அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கவையாகும்.  நாம் தற்போது நல்லிணக்கம் தொடர்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். கடந்த காலங்களில் நீதி முறைமைகளில் குறைபாடு  இருந்தது.  யாழப்பாணம் பகுதியில்   இடம்பெறும் கற்பழிப்புகள் மற்றும் பாலியல் வன்புனர்வுகள் தொடர்பில்  எவரும் முறைபாடு செய்வதில்லை. அப்போது நீதி கட்டமைப்புகள் ஒழுங்காக செயற்படவில்லை. தற்போது அவை சிறப்பாக செயற்பட ஆரம்பித்துள்ளன. அந்த செயற்பாடுகளுக்கான தீர்வுகளை நாம் கண்டறிய வேண்டும்.

குற்றம் இழைத்தவர்கள் அதன் பொறுப்பை ஏற்க வேண்டும். அதிகளவான  மக்கள் கொல்லப்பட்டனர். இதனை யார் செய்தார்கள் அல்லது அவர்களுக்கு என்ன ஆனது. நாம் காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தை உருவாக்கினோம். அது எதிர்காலத்திலும் தொடர்ந்து இயங்கும்.  நாம் சட்ட மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர் எக்னெலிகொட போன்றவர்களை இழந்தோம். நாம் அவர்கள்  தொடர்பிலான தகவல்களை தேட வேண்டும்.  அதனை பதிவு செய்ய வேண்டும். இறுதியாக எத்தனைபேர் காணாமல் போயுள்ளனர் என்பதனை கண்டறிய வேண்டும்.

உண்மைகள் சில சமயங்களில் கசகப்பான இருக்கலாம். ஆனால் நாம் அந்த கசப்போடு தான் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றோம்.  காலாகாலமாக எமது செயற்பாடுகள் மற்றும் சட்டச் சேவைகள் என்பன மாற்றமடையலாம். ஆனால் நாம் எவ்வகையான புரிந்துணர்வுடன் உள்ளோம்   எமது வரலாறு என்ன என்பது தொடர்பில்  அறிந்திருக்க வேண்டும். மனித உரிமைகள் சமூகத்தின் மிக முக்கிய பகுதியாகும்  என்றார்.