நாட்டின் அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளும் 2021 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கட்டம் கட்டமாக பாடசாலைகள் திறக்கப்பட்ட நிலையில் ஒரு வருடத்திற்கு பின் அனைத்து பாடசாலைகளும் இன்று கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படுவதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அதிக மாணவர்கள் உள்ள வகுப்பை 2 அல்லது 3 தரப்பாக பிரித்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு வழங்கியுள்ள வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்றி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கடந்த மார்ச் மாதத்தில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பணிப்புரைகளை கவனத்திற்கொண்டு நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் செயல்படுத்துமாறு கல்வியமைச்சு சம்பந்தப்பட்ட தரப்பினரை கேட்டுக்கொண்டுள்ளது.

முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் 9 ஆம் திகதியுடன் நிறைவடைந்து, விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.