உலகின் மின்னல் வேக வீரரென  ஜமைக்காவின் உசைன் போல்ட்  மீண்டும் நிரூபித்தார்.

ரியோவில் இன்று இடம்பெற்ற ஆடவர்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் 19.78 செக்கனில் பந்தைய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.

இது ஒலிம்பிக் போட்டிகளில் 200 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் உசைன் போல்ட் பெறும் 3 ஆவது தங்கப்பதக்கம் ஆகும்.

  

இதேவேளை, மின்னல் வேக வீரர் உசைன் போல்ட்  ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப்பதக்கங்களை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.