கார்வண்ணன்அமெரிக்காவில் இலங்கையின் நற்பெயரைப் பாதுகாப்பாற்கான ஒப்பந்தம் ஒன்றுக்காக, 6.5 மில்லியன் டொலர்களைப் இமாட் சுபேரி பெற்றிருக்கிறார் என்ற விபரம் இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில்  இந்த நிதி  இலங்கைக்கு ‘நல்ல பிள்ளை' என்று பெயர் எடுத்துக் கொடுப்பதற்காக வழங்கப்பட்டதா அல்லது, அமெரிக்க அரசின் உயர்மட்டத்தினரை வளைத்துப் போடுவதற்காக பரிமாறப்பட்டதா?

பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட அமெரிக்கரான, இமாட் சுபேரிக்கு (Imaad Zuberi) அமெரிக்க நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த போது, அவருக்கு இலங்கைக்கும் இடையில் இருந்த தொடர்புகள் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.


வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் (The Wall Street Journal) கடந்த வாரம் வெளியிட்ட கட்டுரை ஒன்றே அவருக்காக, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கோடிகோடியாக பணத்தைக் வாரி இறைத்த விடயம் அம்பலத்துக்கு வந்தது.
தொழில்துறை வல்லுநராக, பராக் ஒபாமா, ஹிலாரி கிளின்டன் போன்றவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது பிரதான நிதி திரட்டுநராக, பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர் தான் இமாட் சுபேரி.


பிரசார விதிமீறல்கள், நிதி சேகரிப்புகளின் போது வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக் கொண்டதை அடுத்தே அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


இமாட் சுபேரி அமெரிக்காவில் இலங்கையின் நற்பெயரைப் பாதுகாப்பாற்கான ஒப்பந்தம் ஒன்றுக்காக, 6.5 மில்லியன் டொலர்களைப்  அதாவது 131 கோடி ரூபாவை பெற்றிருக்கிறார் என்ற விபரம் இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.


இந்த நிதி, இலங்கை மத்திய வங்கியினால், 2014ஆம் ஆண்டில், இமாட் சுபேரிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-04-18#page-9

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.