சுபத்ரா

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கடந்த 8ஆம் திகதி திடீரென ஒரு பதிவு போடப்பட்டது.அமெரிக்காவினால் கொடையாக வழங்கப்பட்ட‘எஸ்.எல்.என்.எஸ். கஜபாகு’ மற்றும் ‘சமுத்ர’ ஆகிய கப்பல்கள், நூறுசதவீதம் இலங்கை மாலுமிகளுடன்,  இலங்கையின் இறையாண்மையை பாதுகாப்பதுடன், மீனவர்களை மீட்பது,போதைப்பொருள் கடத்தல்காரர்களை தடுப்பது, சுற்றுச்சூழல் பிரச்சினைகளை தீர்ப்பது போன்றவற்றிலும் ஈடுபடுகின்றன” என்று அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தன.


அமெரிக்க தூதரகத்தின் அந்த பதிவுக்கான காரணம் பலருக்குப் புரியவேயில்லை.அது, இந்தியப் பெருங்கடலில் நடந்துகொண்டிருக்கின்ற சீன  அமெரிக்க அதிகாரப் போட்டியை மையப்படுத்தி இடப்பட்ட பதிவு என்பது இன்னமும் கூடப் பலருக்குத் தெரியாது.அமெரிக்கா தனது கடலோரக் காவல் படையில் இருந்து நீக்கிய இரண்டு பாரிய கப்பல்களையும், இந்தியா புதிய சில ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களையும் இலங்கைக்கு வழங்கிய பின்னர், சீனாவும் கொடையாக ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை வழங்கியிருந்தது.

அந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பல் தான் இப்போது, இலங்கை கடற்படையில் “எஸ்.எல்.என்.எஸ். பராக்கிரமபாகு” என்ற பெயரில் இயங்குகிறது.இலங்கைக் கடற்படைக்கும் பராக்கிரமபாகு என்ற பெயருக்கும் அவ்வளவாகப் பொருத்தம் இல்லைப் போலும்,ஏனென்றால், எஸ்.எல்.என்.எஸ். பராக்கிரமபாகு என்றபெயரில் இலங்கை கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்ற இரண்டாவது கப்பல்இது.

இதற்கு முன்னர், சீனாவில் தயாரிக்கப்பட்ட 69மீற்றர் நீளம் கொண்ட,  நீர்மூழ்கி  எதிர்ப்பு அதிவேக பீரங்கிப்படகுஒன்றை இதே பெயரில் வைத்திருந்தது, இலங்கை கடற்படைஅது P-351 என்ற தொடர் இலக்கத்துடன் 1996ஆம் ஆண்டுகடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு தரைவழிப்பாதை இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-04-18#page-9

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.