பஷில் - பங்காளிக் கட்சிகள் : வலுவடையும் முறுகல்  

Published By: Digital Desk 2

18 Apr, 2021 | 07:03 PM
image

 நமது அரசியல் நிருபர்

 

ஆளும் கட்­சி­யான ஸ்ரீலங்கா பொது­ ஜன பெர­மு­னவின் ஸ்தாபகர் பஷில் ராஜ­ப­க்ஷ­வுக்கும் ஆளுங்­கட்­சியில் பங்­காளிக் 

கட்­சி­க­ளாக அங்கம் வகிக்கும் சிறிய கட்­சி­க­ளுக்கும்   இடை­யி­லான முரண்பா­டு­கள் தொடர்ச்­சி­யாக வலு­வ­டைந்து கொண்டே செல்­கின்­றன.   

இரண்டு தரப்­பி­னரும் ஏட்­டிக்குப் போட்­டி­யாக பல்­வேறு அர­சியல் நகர்­வு­களிலும் காய் நகர்த்­தல்­க­ளிலும் ஈடு­பட்டு வரு­வதை காண­மு­டி­கி­றது.

ஆளும் கூட்­ட­ணியின்  பங்­காளிக் கட்­சி­க­ளுக்கு பாதகம் ஏற்­படும் வகை­யி­லேயே ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ அர­சியல் காய் நகர்த்­தலை மேற்­கொண்டு வரு­வ­தாக பங்­காளிக் கட்­சிகள் கடும் குற்­றச்­சாட்டை 

முன்­வைத்­துள்ளன.  தற்­போது பஷில் ராஜ­ப­க்ஷவின் கைக­ளுக்கு சென்­றி­ருப்­பது மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்­ட­மூ­ல­மாகும் என்று கடும் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.  மாகாண சபை  தேர்தல் திருத்தச் சட்­ட­மூலம் ஆளும் கட்­சியின் சார்பில் அமைச்­ச­ர­வைக்கு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அந்த சட்­ட­மூ­லத்­திற்கு ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் பங்­காளி கட்­சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருக்­கின்­றன. 


மிக முக்­கி­ய­மாக மைத்­தி­ரி­பால சிறிசேன தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, விமல் வீர­வன்­சவின் தேசிய சுதந்­திர முன்­னணி, உதய கம்­மன்­பில மற்றும் வாசு­தேவ நாண­யக்­கா­ரவின் கட்­சிகள்  உள்­ளிட்ட பல்­வேறு கட்­சிகள் கடும் எதிர்ப்பை இந்த தேர்தல் திருத்தச் சட்­ட­மூ­லத்­திற்கு வெளி­யிட்­டுள்­ளன.  

குறிப்­பாக ஒரு தொகு­தியில் மூவர் போட்­டி­யிடும் வகையில் இந்த தேர்தல் திருத்தச் சட்­ட­மூலம் அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.  இதற்கு பங்­காளிக் கட்­சிகள் கடும் எதிர்ப்பை வெளி­யிட்டு இருக்­கின்­றன. ஒரு தொகு­தியில் மூவர் போட்டியிடும் பட்­சத்தில் அதில் பிர­தா­ன­மாக  ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின்  வேட்­பா­ள­ருக்கு அதிக அள­வி­லான வாக்­குகள் கிடைக்கும் என்றும் ஏனைய சிறிய கட்­சி­களின் வேட்­பா­ள­ருக்கு வாக்­குகள் கிடைக்­காது என்றும் சிறிய கட்­சிகள் குற்றம் சாட்­டு­கின்­றன. 

 அதன் அடிப்­ப­டையில்   தேர்தல் சட்ட மூலத்­துக்கு கடு­மை­யான எதிர்ப்பை பங்­காளிக் கட்­சிகள் வெளி­யிட்­டுள்­ளன. இந்த நிலையில் சிறிய கட்­சி­களின் மற்றும்  பங்­காளி கட்­சி­களின் எதிர்ப்பை மீறி மாகா­ண­சபைத் தேர்தல் திருத்தச் சட்­ட­மூலம் 

பாரா­ளு­மன்­றத்­துக்கு  கொண்டு வரப்­படும் பட்­சத்தில் அதனை முழு­மை­யாக தோற்­க­டிப்­ப­தற்கு முயற்­சிப்­பது குறித்து பங்­காளிக் கட்­சிகள் ஆராய்ந்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.  

அண்­மையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் விமல் வீர­வன்­சவின் தேசிய சுதந்­திர முன்­ன­ணியும் உதய கம்­மன்­பி­லவின் பிவித்­துரு ஹெல உறு­ம­யவும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தன.  இதன்­போது இந்தத் தேர்தல் திருத்தச் சட்­டத்தை முற்­றாக எதிர்ப்­பது என்று அந்த கட்­சிகள் தீர்­மா­னித்­தி­ருந்­தன. 

 அது­மட்­டு­மின்றி பங்­காளிக் கட்­சி­களின் தீர்­மா­னத்தை மீறி இந்த சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டால்  அதனைத் தோற்­க­டிப்­ப­தற்கும் அதையும் மீறி பாரா­ளு­மன்­றத்தில் இந்த சட்­ட­மூலம் நிறை­வேறும் பட்­சத்தில் எதிர்­வரும் மாகா­ண­சபை 

தேர்­தலில் பங்­காளிக் கட்­சிகள் அனைத்தும் தனித்துப் போட்­டி­யி­டு­வது குறித்தும் ஆரா­யப்­பட்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.  

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-04-18#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04