சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரெம்ளின் விமர்சகரும், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருமான அலெக்ஸி நவால்னியின் உடல் நிலை மோசமாகவுள்ளதால், அவர் மரணத்தின் விளிம்பில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 31 முதல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் முக்கிய எதிர்ப்பாளரான நவால்னி முதுகுவலி மற்றும் அவரது கால்கள் மற்றும் கைகளில் உணர்வின்மைக்கு முறையான மருத்துவ சிகிச்சை கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந் நிலையில் அவரது உடல் நில‍ை குறித்து சனிக்கிழமையன்று தகவல் தெரிவித்துள்ள அவரது மருத்துவர் யாரோஸ்லாவ் ஆஷிக்மின், 

" எந் நேரத்திலும் அவர் இதய பிரச்சினைகள் அல்லது சீறுநீரக செயலிழப்புக்கு ஆளாக நேரிடும் என்பதை அண்மைய இரத்த பரிசோதனை முடிவுகள் சுடடிக்காட்டுகின்றன. அதனால் நவால்னி இறந்து கொண்டிருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

இதேவேளை அவரது தனிப்பட்ட மருத்துவர் அனஸ்தேசியா வாசிலியேவா உட்பட நான்கு மருத்துவர்கள் அவரை அவசரமாக பார்க்க அனுமதி கோரி சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மோசடி குற்றச்சாட்டுக்காக நவால்னி பெப்ரவரி மாதம்  சிறையில் அடைக்கப்பட்டார்.