அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால முகாமையாளராக மனுஜ கரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 25 ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் அணியுடனான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது மனுஜ கரியப்பெரும, அணியை நிர்வாகிப்பார் என இலங்கை கிரிக்கெட் முகாமைத்துவ குழுவின் தலைவர் அர்ஜுன டி சில்வா உறுதிப்படுத்தினார்.

தற்போதைய மகளிர் கிரிக்கெட் செயல்பாடுகள் மற்றும் மேம்பாட்டு ஆலோசகராக இருக்கும் கரியபெரும, பங்களாதேஷ் தொடருக்கு மட்டுமே இலங்கை அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வட்டாரங்களின்படி, பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் பின்னர் இலங்கை அணிக்கு நீண்ட கால அடிப்படையில் நிரந்தர மேலாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.