கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவினால் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படாது - நிமல் லன்சா

18 Apr, 2021 | 07:38 AM
image

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுக நகர பொருளதார ஆணைக்குழுவினால் நாட்டின் இறையாண்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தேசிய பொருளாதாரத்தை  துரிதமாக அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை காணப்படுகிறது என கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு துறைமுக  நகர பொருளாதார ஆணைக்குழு  சட்டமூலம் விவகாரம் தற்போதைய  பிரதான  பேசுபொருளாக காணப்படுகிறது. 

தவறான விடயங்களை  முன்னிலைப்படுத்தி அதனுடாக அரசியல் இலாபம் தேடிக்கொள்ள ஆளும் தரப்பின் ஒரு சில உறுப்பினர்களும், எதிர்க்கட்சியினரும் முயற்சிக்கிறார்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்களை வைத்துள்ளார்கள். 

30 வருட கால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த  தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்திய தன் கௌரவத்தை நாட்டு மக்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இன்றும் வழங்குகிறார்கள்.

கொழும்பு துறைமுக நகரம்  சீன காலணித்துவ ஆட்சிக்குள் கொண்டுவரப்படுவதாக  குறிப்பிடப்படும் கருத்து தவறானதாகும். 

ராஜபக்ஷாக்கள் நாட்டை ஒருபோதும் காட்டிக் கொடுக்கவில்லை.  சர்வதேசத்திடமிருந்து நாட்டை பல முறை பாதுகாத்துள்ளார்கள். நெருக்கடியான சூழ்நிலையிலும் நாட்டின் சுயாதீனத்தன்மை விட்டுக் கொடுக்கப்படவில்லை.

துறைமுக நகரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு அரசாங்கம் உரிய தீர்வினை வழங்கும். இவ்விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தையினை முன்னனெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. போலியான செய்திகள் தொடர்பில் நாட்டு மக்கள் அவதானமாக  செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடவத்தையில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்...

2025-02-15 12:00:48
news-image

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு ; இருவர்...

2025-02-15 11:06:50
news-image

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

2025-02-15 10:58:37
news-image

எஹெலியகொடையில் பேரனால் தாக்கப்பட்டு தாத்தா உயிரிழப்பு!

2025-02-15 11:29:58
news-image

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர்...

2025-02-15 10:54:31
news-image

யாழுக்கு விஜயம் செய்தார் பிரதமர் ஹரிணி

2025-02-15 10:49:00
news-image

பதுளை - இராவண எல்ல வனப்பகுதியில்...

2025-02-15 10:35:05
news-image

உணவகத்தில் அடிதடி : யாழ். பொலிஸ்...

2025-02-15 09:59:37
news-image

பாணந்துறையில் பஸ் விபத்து ; நால்வர்...

2025-02-15 09:52:54
news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47