சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

Published By: Ponmalar

18 Aug, 2016 | 05:57 PM
image

(பா.ருத்ரகுமார்)

சட்டத்துக்கு முற்றிலும் புறம்பாக அரசாங்கத்தினால் நிறைவேற்றிக்கொள்ளப்பட்டள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்ட மூலத்துக்கு இறுதி கையொப்பமிட்டவர் என்ற வகையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேணை கொண்டு வரப்படலாம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்தார்.

என். எம் பெரேரா மண்டபத்தில் இன்று (18)இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூட்டு எதிரணியினர் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, பந்துல செனவிரத்ன, ஜி.எல். பீரிஸ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில, 

அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட காணாமல் போனோர்  தொடர்பான அலுவலக சட்டமூலத்தினை விவாதிப்பதற்கு இரு நாள் கால அவகாசம் கேட்கப்பட்டிருந்த நிலையில் இறுதியில் எமது பாரிய எதிர்ப்பின் பேரில் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று பகல் 12 மணியுடன் விவாதங்கள் நிறைவுப்பெற்றது.

இச்சட்டமூலம் தொடர்பில் விவாதங்களை மேற்கொள்ளவோ, எமது தரப்பு கருத்துக்களை வெளியிடுவதற்கோ எவ்வித சந்தர்ப்பமும் வழங்கப்படவில்லை. இது மிகவும் பாரதூரமான அரசியலமைப்பு அத்துமீறலாகும். 

சபாநாயகர் தாய்நாட்டை நேசிப்பவர் என்ற வகையில்  அவருடன் நாம் கலந்துரையாடியுள்ளோம். இவ்விடயத்துக்கு முறையான தீர்வை முன்வைப்பார் என் நினைக்கின்றோம். சட்ட மூலத்துக்கு இறுதி கைகொப்பமிட்டவர் என்ற வகையில் அவருக்கெதிராக நம்பிக்கை இல்லா பிரேணை கொண்டு வரப்படலாம். ஆனால் அவ்வாறான தேவையோ அல்லது எம்மிடம் உள்ள உறுப்பினர் தொகையை கொண்டு அவ்வாறான செயற்பாடுகளுக்கு செல்வதிலோ எவ்விதமான பயனுமில்லை. என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்