(எம்.மனோசித்ரா)

நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடுகளை ஊக்குவிக்கும் அதேவேளை , சுதந்திரம் , இறையாண்மை , சுயாதீனத்தன்மை என்பவற்றையும் பாதுகாக்க வேண்டும். 

இவற்றுக்கு ஏதேனுமொரு வகையில் அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அதற்கு எதிராக சுதந்திரக் கட்சி போராடும் என்று பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

கொழும்பு துறைமுன நகர சர்ச்சை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு முதலீடுகளை ஊக்குவிக்கும் அதேவேளை நாட்டின் சுதந்திரம் , இறையாண்மை , சுயாதீனத்தன்மை என்பவற்றையும் பாதுகாக்க வேண்டும். 

இலங்கை ஜனநாயகம் மிக்கதொரு நாடாகும். எனவே ஜனநாயகத்திற்கு ஏதேனுமொரு வகையில் அச்சுறுத்தல் ஏற்படுமாயின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதற்கு எதிராக போராடும்.

தற்போது புதிதாக கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது. அது தொடர்பிலும் சுதந்திர கட்சி அவதானம் செலுத்தியுள்ளது. 

அதற்கமைய சட்ட வல்லுனர்கள் , மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட தரப்பினரின் நிலைப்பாடுகளை அறிந்து அவற்றுக்கேற்ப சுதந்திர கட்சி செயற்படும்.

இலங்கை இறையாண்மையும் சுயாதீனத்தன்மையும் மிக்க நாடாகும். அதனை பாதுகாக்க வேண்டும். எனவே முதலீடுகளை ஊக்குவிக்கும் அதே வேளை இவற்றையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு சுதந்திர கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றார்.