தீயில் சங்கமமானது விவேக்கின் உடல் 

17 Apr, 2021 | 09:35 PM
image

மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் விவேக்கின் உடல், 78 குண்டுகள் முழங்க பொலிஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்.16) காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

அவருக்கு வைத்தியசாலையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (ஏப்.17) அதிகாலை 4.35 மணியளவில் அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து மாலை 4 மணியளவில் விருகம்பாக்கத்தில் இருந்து, மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின்மயானத்திற்கு அவரது உடல், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. 

இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்க, அவரது கலை, சமூகச் சேவையை கெளரவிக்கும் விதமாக பொலிஸ் மரியாதையுடன், அவரது உடலை அரசு தகனம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. 

அதன்படி நடிகர் விவேக்கின் உடலுக்கு, 78 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க பொலிஸ் மரியாதை அளிக்கப்பட்டது. 

இதையடுத்து பொலிஸ் சார்பில் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து விவேக்கின் உடலுக்கு அவரது மகள் இறுதிச் சடங்குகளை செய்தார். பின்னர் நடிகர் விவேக்கின் உடல், மேட்டுக்குப்பத்தில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதேவேளை, நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது ரசிகர்கள் மரக்கன்றுகளை எடுத்துச் சென்றமை நெகிழ்ச்சியடையச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமாதானத்திற்கு வராவிட்டால் - எதிர்காலத்தில் மேலும்...

2025-06-22 08:23:35
news-image

அமெரிக்கா அணுஉலைகளை தாக்கியுள்ளது - ஈரானின்...

2025-06-22 07:26:59
news-image

ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க...

2025-06-22 07:13:33
news-image

யுத்தத்தின் ஆரம்பம் - ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்

2025-06-22 06:49:17
news-image

ஈரானின் மூன்று அணுஉலைகள் மீது தாக்குதல்...

2025-06-22 06:28:37
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்

2025-06-22 06:22:12
news-image

ஈரானின் புதிய தாக்குதலில் இஸ்ரேலில் 17...

2025-06-20 20:01:06
news-image

அரச பயங்கரவாதம் - இஸ்ரேலின் தாக்குதல்கள்...

2025-06-20 15:41:49
news-image

ஈரானின் ஆன்மீகதலைவரின் சிரேஸ்ட ஆலோசகர் கொல்லப்படவில்லை...

2025-06-20 15:23:30
news-image

ஈரான் கிளஸ்டர் குண்டு ஏவுகணையை பயன்படுத்துகின்றது...

2025-06-20 15:16:05
news-image

கமேனி கொல்லப்படுவதை ஏற்க முடியாது ;...

2025-06-20 10:38:45
news-image

இஸ்ரேலின் பீர்செவாவில் மைக்ரோசொவ்ட் அலுவலகத்திற்கு அருகில்...

2025-06-20 10:08:43