நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் 617 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இறுதியாக 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 96 100 ஐ கடந்துள்ளது. 

இன்று சனிக்கிழமை இரவு 9 மணி வரை 204 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 96 390 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 92 832 பேர் குணமடைந்துள்ளதோடு , 2907 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.