செயலிழப்பு கண்காணிப்பு வலைத்தளமான Downdetector.com.v தகவலின் படி வெள்ளிக்கிழமை சுமார் 40,000 பயனர்களுக்கு சமூக வலைதளமான டுவிட்டர் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டுவிட்டர்  தளத்தில் பதிவுகளை பார்ப்பதிலும் பகிர்வதிலும்  சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டுவிட்டரில்,

“ஏதோ தவறு ஏற்பட்டது. மீண்டும் முயற்சி செய், பதிவுகள்  தற்போது பதிவாகவில்லை“ என ஒரு செய்தி தெரிவிக்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான பயனர்கள் டுவிட்டரில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் புகாரளித்த பின்னர் சிக்கலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. 

“உங்களில் சிலருக்கு டுவீட் செய்ய முடியாமல் இருக்கலாம். நாங்கள் சிக்கலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம், நீங்கள் விரைவில் மீண்டும் டுவிட்டரை பயன்படுத்தலாம் ” என டுவிட்டர் நிறுவனம் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.

செயலிழப்பு கண்காணிப்பு வலைத்தளமான Downdetector.com.v  தகவலின் படி, வெள்ளிக்கிழமை இரவு சுமார் 40,000 பயனர்கள் டுவிட்டரில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள்தொடர்பில் புகாரளித்துள்ளனர்.

டவுன்டெக்டர் அதன் தளங்களில் பயனர் சமர்ப்பித்த சிக்கல்கள் உட்பட தொடர்ச்சியான மூலங்களிலிருந்து நிலை அறிக்கைகளை இணைப்பதன் மூலம் செயலிழப்புகளைக் கண்காணிக்கிறது. 

செயலிழப்பு அதிக எண்ணிக்கையிலான பயனர்களை பாதித்திருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.