தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடர் பாகிஸ்தான் வசம் :  தொடர் நாயகனாக பாபர் அஸாம்

17 Apr, 2021 | 11:45 AM
image

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரை 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.

தென்னாபிரிக்காவின் செஞ்சூரியனில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 19.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வெண்டர் டஸன் 52 ஓட்டங்களையும் ஜேன்மேன் மாலன் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹசன் அலி மற்றும் பஷீம் அஸ்ரப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுளையும் ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகளையும் ஷாயின் அப்ரிடி மற்றும் மொஹமட் நவாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 145 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, பகர் சமான் 60 ஓட்டங்களையும் மொஹமட் நவாஸ் ஆட்டமிழக்காது 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், லிஸாட் வில்லியம்ஸ் மற்றும் சிஸாண்டா மகாலா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் போர்ச்சுன், டப்ரைஸ் சம்ஸி மற்றும் பெலுக்வாயோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, பஷிம் அஸ்ரப் தெரிவுசெய்யப்பட்டதோடு தொடரின் நாயகனாக பாபர் அசாம் தெரிவுசெய்யப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41
news-image

சுஜான் பெரேரா 2 பெனல்டிகளைத் தடுத்ததால்...

2024-09-11 00:58:18
news-image

மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை...

2024-09-10 19:10:56
news-image

இந்திய டெஸ்ட் குழாத்தில் மீண்டும் ராகுல்,...

2024-09-10 14:11:46