யாழில் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பம் - அரசாங்க அதிபர்

Published By: Digital Desk 3

17 Apr, 2021 | 11:31 AM
image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்  தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்ப்பாண மாவட்ட தற்போதைய நிலைமை தொடர்பில் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்துக்குப் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வரையான நிலைவரப்படி 1116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 12 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், இன்னும் 600 பேரளவில் வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருவதாகவும் அரச அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், கொரோனா தொற்று அச்சநிலை காரணமாக 1,784 குடும்பங்களைச் சேர்ந்த 5,042 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் சற்றுக் குறைந்துவரும் நிலையில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன எனக் குறிப்பிட்டுள்ள அரசாங்க அதிபர் அவர்கள், யாழ். மாவட்டத்தை இயல்பான நிலையில் வைத்திருக்க மக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து சுகாதார தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31