நடிகர் விவேக்கின் மறைவிற்கு திரைத்துறைனர், அரசியல் தலைவர்கள் இரங்கல்...!

By T. Saranya

17 Apr, 2021 | 12:10 PM
image

நகைச்சுவை நடிகர் விவேக் உயிரிழந்ததை தொடர்ந்து திரைப் பிரபலங்கள் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமலஹாசன்

நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் 

நீங்கள் எங்கள் விட்டுப் பிரிந்ததை நம்பமுடியவில்லை. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். பல வருடங்களாக எங்களைச் சிரிக்க வைத்தீர்கள். உங்களுடைய சாதனைகள் எப்போதும் எங்களின் நினைவுகளில் இருக்கும் என கூறியுள்ளார்.  

கடந்த ஏப்ரல் 11 அன்று ரஹ்மானைப் பாராட்டி விவேக் ட்வீட் வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது,

தன் நிலை உயரும் போது பணிவு வரவேண்டும். இதை ரஹ்மான் அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்! ஞானமும் அடக்கமும் சேர்ந்தால் உன்னதம். அதுவே இசைப்புயல் என்றார். 

நடிகர் சத்யராஜ்

நடிகர் விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சத்யராஜ். அந்த வீடியோவில் சத்யராஜ் பேசுகையில், ''சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து 'சின்னக் கலைவாணர்' என்று பெயர் வாங்கியவர் என் அன்பு தம்பி விவேக். மறைந்துவிட்டார் என்கிற வார்த்தையை பயன்படுத்த மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.

அவர் நம்முடன் இல்லாமல் போனதற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். வெறும் வார்த்தைகளால் அவரது குடும்பத்திற்கோ, ரசிகர்களுக்கோ, கலையுலகிற்கோ ஆறுதல் படுத்திவிட முடியாது. தம்பி உன்னை இழந்து வாடும் கோடிக்கணக்கான சகோதரர்களில், ரசிகர்களில் நானும் ஒருவன்'' என்று  அந்த காணொளியில் உருக்கத்துடன் பேசியுள்ளார்.    

நடிகர் ரஜினிகாந்த் 

சின்னக்கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.

சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள், விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து

 “அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!

எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்

அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!

திரையில் இனி பகுத்தறிவுக்குப்

பஞ்சம் வந்துவிடுமே!

மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!

நீ நட்ட மரங்களும் உனக்காக

துக்கம் அனுசரிக்கின்றன.

கலைச் சரித்திரம் சொல்லும் :

நீ ‘காமெடி’க் கதாநாயகன்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் எஸ்.ஜே.சூர்யா

 "மாபெரும் கலைஞனே, மனம் உடைந்து போனேன். பெரிய இழப்பு... என்ன நடக்கின்றது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் இமான்

நமது விவேக் அவர்கள் நம்மிடையே இனி இல்லை என்பதை எனது மனமும் ஆன்மாவும் நம்ப மறுக்கின்றன. என்ன ஒரு அசாதாரணமான கலைஞர், மனிதரை நாம் இழந்திருக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்

 ஆண்டவா. என்னால் நம்பமுடியவில்லை.மூத்த நடிகர் விவேக் மறைந்து விட்டார் என்கிற செய்தியைக் கேட்டு விழித்தேன். மனமுடைந்துவிட்டேன். நம் காலகட்டத்தில் இருந்த மிகச்சிறந்த நகைச்சுவையாளர். தனது நகைச்சுவையில் எப்போதும் சமூகத்துக்கான செய்தியைச் சேர்த்தவர். எங்கள் நெஞ்சில் என்றும் நீங்கள் வாழ்வீர்கள் சார். என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் பார்த்திபன்

நடிகர் பார்த்திபன், சமூகத்தின் மீது தீரா நேசம்  கொண்ட  நண்பர் விவேக் அவர்களின் பிரிவு ...வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர் என பதிவிட்டுள்ளார்.

நடிகை கஸ்தூரி

நடிகர் விவேக்கின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. சிந்தனையாளர் விவேக்கின் எண்ணங்கள் இனி நமக்கு கிட்டா. ஆனால்  சமூக இயற்கை ஆர்வலர் விவேக்கின் கனவை நாம் மெய்ப்பட செய்ய  முடியும். மரம் நடுவோம்.

நடிகர் செந்தில்

திரைத்துறையில் திறமையான நடிகர் விவேக். சுற்றுச் சூழலுக்காக போராடியவர் என்று தனது இரங்கல் செய்தியில் நடிகர் செந்தில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் மயில்சாமி

நல்ல தர்ம சிந்தனை உள்ளவர். அவருடைய இழப்பு எனக்கு மிகுந்த வேதனையாக உள்ளது.

நடிகர் சூரி:

அவர் மறைந்தாலும் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். அவர் மறைவை நினைத்து மரங்கள் கூட கண்ணீர் சிந்தும்.

நடிகை ராதிகா

நடிகர் விவேக் மரண செய்தி எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.

நடிகை குஷ்பு

 மிகப்பெரிய அதிர்ச்சி, நான் உடைந்து போயிருக்கிறேன். இவ்வளவு சுறுசுறுப்பாக, திடமாக இருந்த ஒரு நபர் எப்படி இறக்க முடியும்? விவேக் மிகச்சிறந்த மனிதர். சீக்கிரம் மறைந்துவிட்டார். அவரது இழப்பைக் கண்டிப்பாக உணர்வோம்.

நடிகர் சதீஸ்

தமிழ் சினிமாவிற்கும்  தமிழ் சமூகத்திற்கும் தாங்க முடியாத பேரிழப்பு. 

நீங்கள்  விட்டுச் சென்ற கருத்துக்களும்  நட்டுச் சென்ற மரங்களும்  என்றும் உங்கள் பெயர் சொல்லும். 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 

''மரம் நடுதல் போன்ற சூழலியல் சார்ந்த சமூகப் பணிகளிலும் ஈடுபடுத்திக் கொண்டவர் நடிகர் விவேக். நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர் அவர். பல சாதனையை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் படைத்தவரை இயற்கை அவசரமாக ஏன் பறித்துக்கொண்டதோ?'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தழிழக முதலமைச்சர் பழனிசாமி

மறைந்த விவேக் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் சமூக பாதுகாப்பில் அக்கறை கொண்டவராக இருந்தார். இவர் பழக மிக இனிமையானவர். இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர். கலாமின் கனவை நிறைவேற்ற நல்ல பணிகள் செய்தவர். கலை மற்றும் சமூக சேவையால் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

தழிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம்

திரைப்படங்கள் மூலம் சமூக சீர்திருத்த கருத்துக்களை பரப்பியவர். இவரது மறைவு மீளா துயரத்தை தருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'பொன்னியின் செல்வன்' பாகம் 1 -...

2022-10-04 17:22:13
news-image

சத்யராஜ் - வசந்த் ரவி இணையும்...

2022-10-04 10:53:35
news-image

நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்தின்...

2022-10-04 10:53:16
news-image

தேசிய விருது பெற்ற நடிகர் கிஷோர்...

2022-10-01 16:04:14
news-image

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற...

2022-10-01 16:03:52
news-image

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

2022-10-01 16:03:39
news-image

நடிகர் மைக்கேல் தங்கதுரை நடிக்கும் 'ஆரகன்'...

2022-10-01 16:02:55
news-image

பொன்னியின் செல்வன் பாகம் 1 -...

2022-10-01 12:21:05
news-image

கார்த்தியின் 'சர்தார்' பட டீசர் வெளியீடு

2022-09-30 16:28:19
news-image

மேடை கோல் பந்தாட்டத்தை தமிழில் அறிமுகப்படுத்தும்...

2022-09-30 16:22:28
news-image

நடிகை ஷீலா ராஜ்குமாரின் 'பட்டாம்பூச்சியின் கல்லறை'...

2022-09-30 10:45:08
news-image

மகேஷ் பாபுவின் தாய் இந்திராதேவி காலமானார்

2022-09-28 11:45:04