பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பாக ஆராய கட்சித் தலைவர் கூட்டம் திங்கட்கிழமை

17 Apr, 2021 | 10:17 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழுவின் கூட்டம் கட்சி தலைவர்களின் பங்குபற்றலுடன் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக  பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதன்போது எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ள ஏப்ரல் மாதத்தின் இறுதி பாராளுமன்ற வாரத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கும் பிரேரணைகள் மற்றும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்ற சட்ட மூலங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் அரசியல் பழிவாங்கல் தொடர்பாக தேடிப்பார்க்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பான யோசனைகள் எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவும் அதுதொடர்பான விவாதம் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் நடத்தவும் இதற்கு முன்னர் இடம்பெற்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டிருந்தது.

எனவே எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போது இதுதொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாங்குளம் வைத்தியசாலையின் பெயர் பலகையில் தமிழ்...

2024-05-23 14:50:11
news-image

வெசாக் நிகழ்வை முன்னிட்டு சிறைக் கைதிகளை...

2024-05-23 14:20:50
news-image

கராப்பிட்டிய வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்ற...

2024-05-23 14:05:43
news-image

திருகோணமலையில் இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி...

2024-05-23 14:01:55
news-image

உணவுப் பொதியில் போதைப்பொருளை மறைத்து எடுத்துச்...

2024-05-23 13:59:34
news-image

திருகோணமலை சல்லி கடற்பரப்பில் மீனவர்கள் இருவர்...

2024-05-23 13:00:32
news-image

நுவரெலியாவில் பலத்த காற்று, பனி மூட்டத்துடன்...

2024-05-23 13:18:03
news-image

கல்முனை நகரில் ஒருவழிப் பாதை இருவழிப்...

2024-05-23 13:07:36
news-image

இங்கிரியவில் வீடொன்றிலிருந்து பெண் சடலமாக மீட்பு

2024-05-23 13:05:32
news-image

யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் கடலில் மயங்கி...

2024-05-23 13:07:23
news-image

வெசாக் தினத்தையொட்டி பொது மன்னிப்பு ;...

2024-05-23 12:41:01
news-image

இலங்கை பொலிஸ் ஏற்பாட்டில் வெசாக் பக்திப்...

2024-05-23 12:31:59