ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகித்த அமைப்பாளர்கள் கட்சி தலைவரின் பரிந்துரைகளை அவர்களது ஆசனத்தில் நடைமுறைப் படுத்தாமையினாலேயே 13 அமைப்பாளர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

எனவே அரசியல் பழிவாங்கல்களுக்கு அமைவாக எவரும் நீக்கப்பட்டவில்லை. மாறாக கட்சியின் மறுசீரமைப்புக்காகவே பதவி நீக்கம் செய்யப்பட்டனர் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஷபக்ஷ, சந்திரிகா பண்டாராநாயக்க குமாரதுங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய மூவரதும் பங்கேற்பு உடனே கட்சியின் 65 ஆவது மாநாடு நடைபெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

சுதந்திர கட்சியின் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று அக்கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்காண்டவாறு தெரிவித்தார்.