தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்நிலையில்,  சிம்ஸ் வைத்தியசாலையின் துணைத் தலைவர் வைத்தியர் ராஜு சிவசாமி தனியார் நிறுவன தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் தெரிவித்ததாவது,

நேற்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நினைவிழந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டார். கொண்டு வரும்போது அவருக்கு நாடித்துடிப்பே இல்லை. 

உடனடியாக அவருக்கு அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆஞ்சியோகிராம் மேற்கொள்ளப்பட்டது. இதயத்திற்குச் செல்லும் இடதுபுற இரத்தக்குழாயில் 100% அடைப்பு இருந்தது. அதைக் கண்டுபிடித்து சிகிச்சை செய்தோம். 

எக்மோ செய்த பிறகுதான் இதற்கான சிகிச்சையை மேற்கொள்ள முடிந்தது. பாதிப்பு தீவிரமாக இருந்ததால் உயிரிழக்க காரணம். 

விவேக்கிற்கு பலவிதமான சிகிச்சை அளித்தும் இதயம் பலவீனமாக இருந்ததால் எங்களது முயற்சிகளுக்குப் பலன் இல்லை. இந்த உடல்நலப் பிரச்சினை ஒரே நாளில் வராது. 

இரத்தக் கொதிப்புக்கு அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்ததாக அவரது தரப்பில் கூறப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க; நடிகர் விவேக் காலமானார்