மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு அதற்கான சிகிச்சை ‘கோல்டன் ஹவர்’ எனப்படும் பாதிப்பு ஏற்பட்ட தருணத்திலிருந்து ஒரு மணி தியாலத்திற்குள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஓஞ்சியோ பிளாஸ்ரி என்ற சிகிச்சை அளிக்கப்படவேண்டும். இத்தகைய சிகிச்சை மூலம் அவர்களின் பாதிப்பை குணப்படுத்தலாம்.
இந்நிலையில் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஏறக்குறைய இருபது மில்லியன் மக்கள் இதய பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் என்றும். இதில் தெற்காசிய நாடுகளைச் சார்ந்தவர்களே அதிகம் என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது.
இதயத்திற்கு, குருதியை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில், அடைப்பு ஏற்படுவதால் ரத்த ஓட்டம் தடைபடும். இதுவே மாரடைப்புக்கு காரணம். ரத்த நாள அடைப்பை, சத்திரச் சிகிச்சையின்றி சீராக்க ஓஞ்சியோபிளாஸ்ரி என்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் போது நோயாளியின் தொடை பகுதியிலுள்ள நரம்பின் வழியாக, கதீட்டர் எனப்படும் பிரத்யேக குழாய் செலுத்தப்படும்.
அதனுள் 'ஸ்டென்ட்' என்ற விரியக்கூடிய உலோக வலை பொருத்தப்பட்டிருக்கும். அடைப்பு ஏற்பட்ட பகுதியில் வைத்து, 'ஸ்டென்ட்' வலையை விரிவடைய செய்வார்கள். இதனால், அடைப்பு நீங்கி, ரத்த ஓட்டம் சீரடையும்.
சிலருக்கு ஓஞ்சியோஜெட் திராம்பெக்மி என்ற புதிய சிகிச்சையும் இருக்கிறது. ஓஞ்சியோ பிளாஸ்ரி சிகிச்சையில் சிறிய மாற்றங்களுடன் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக பிரத்யேகமான வலைக் கம்பியுடன் இரண்டு பம்புகள் இணைக்கப்பட்டிருக்கும். இவை நோயாளியின் தொடைப் பகுதி வழியாக அடைப்பு ஏற்பட்ட இரத்தகுழாயிற்குள் அனுப்புவர். அங்கு சென்றடைந்ததும், இரத்தநாளத்தினை அடைத்திருக்கும் இரத்தக்கட்டியின் மீது பிரத்யேக திரவத்தை அழுத்தத்துடன் செலுத்துவர். இதனால் அங்கு உருவாக்கப்படும் வெற்றிடத்தால், அங்குள்ள இரத்தக்கட்டி சிதறி வெடிக்கும்.
அதன் போது மற்றொரு வலையின் மூலம் தூளாக்கப்பட்ட இரத்தக்கட்டிகள் உறிஞ்சி சேகரிக்கப்பட்டு, இரத்த நாள அடைப்பு சீராக்கப்படும். இதன் மூலம் மாரடைப்பு முழுமையாக குணப்படுத்தப்படும். இதில் ஸ்டெண்ட் எனப்படும் வலை பொருத்தபடாததால், மாரடைப்பிற்கான சிகிச்சைக்கு பிறகு வழக்கமான மாத்திரைகளை குறைத்துக் கொள்ளலாம். அத்துடன் ஒரே வாரத்திற்குள் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.
டொக்டர் துர்காதேவி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM