மருமகனின் கத்திக்குத்தில் மாமியார், மச்சான் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 4

16 Apr, 2021 | 08:40 PM
image

வவுனியா கண்டி வீதி , வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் 3.30 மணியளவில், மருமகன் மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதலில் மாமியார் மற்றும் மச்சான் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், 

இன்று (16) பிற்பகல் வவுனியா வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக மரம் ஒன்றுக்கு பின் மறைந்திருந்து மனைவியின் சகோதரனான மச்சானுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு முரண்பட்டுள்ளார் .

இந்நிலையில் தன்வசம் மறைத்து வைத்திருந்த கத்தி ஒன்றினால் இடுப்பு முதுகில் குத்தியுள்ளார் .

இதனை அவதானித்த மாமியார் ஓடிச் சென்று தடுக்க முற்பட்டபோது அவருக்கும் கையில் கத்தியால் குத்தியுள்ளார். 

இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் அருகிலிருந்தவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் . 

கிளிநொச்சி திருநகர் பகுதியைச் சேர்ந்த கத்திக்குத்து மேற்கொண்ட இளைஞனை அப்பகுதியிலிருந்தவர்கள் தடுத்து வைத்திருந்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர் .

காயமடைந்த இருவரும் தேக்கவத்தை பகுதியை சேர்ந்த அரியதாஸ் திரேஸ் (வயது - 35) , அசோகன் வசந்தி (வயது - 52) எனவும் இவ்வாறு இவர்களுக்கிடையே குடும்ப முரண்பாடுகள் நீண்டநாட்களாக இடம்பெற்று வந்துள்ளதாகவும் இதன் வெளிப்பாடே இன்றைய கத்திக்குத்துச் சம்பவம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது பொலிசாருக்குத் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹவாய் 'ரிம்பேக்' சர்வதேச கடற்படைப் பயிற்சியில்...

2026-07-21 15:53:28
news-image

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல்...

2026-07-21 15:47:00
news-image

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு மீண்டும்...

2026-07-21 15:27:16
news-image

இரத்தினபுரி வைத்தியசாலையில் உயிரிழந்த மகளின் மரணம்...

2026-07-21 14:46:43
news-image

நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச சேவையும்...

2026-07-21 14:55:45
news-image

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை...

2026-07-21 14:39:05
news-image

தித்வா சூறாவளியால் சேதமடைந்த சமூக உட்கட்டமைப்பு...

2026-07-21 14:51:49
news-image

அட்டனில் தற்காலிக கடைகளை அகற்றச் சென்ற...

2026-07-21 14:24:27
news-image

மரதன்கடவலையில் சொகுசு பேருந்து – லொறி...

2026-07-21 14:25:22
news-image

ஹாலிஎல , உனுகொல்ல தோட்ட இளைஞர்...

2026-07-21 13:59:26
news-image

இலங்கையில் விவசாய இயந்திர மையம் அமைப்பது...

2026-07-21 13:42:48
news-image

ஹோமாகம - கட்டுவான  தலைக்கவச உற்பத்தி...

2026-07-21 13:43:07