துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் ஊழல் மோசடிகளுக்கு வழிவகுக்கும் - ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல்

Published By: Digital Desk 3

16 Apr, 2021 | 03:52 PM
image

(நா.தனுஜா)

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தின் விளைவாக ஊழல் மோசடிகள் இடம்பெறக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டு, அதற்கு எதிராக ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

மேற்படி சட்டமூலத்தின் கூறுகள், அரசியலமைப்பின் முக்கிய சரத்துக்களை மீறும்வகையில் அமைந்திருப்பதாகவும் அவை நிதிப்பாய்ச்சல்களை இலகுவாக்குவதன் விளைவாக நிதிமோசடிகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுப்பதாகவும் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை துறைமுக நகரத்தில் அமைக்கப்படவுள்ள வணிக, வர்த்தகக் கட்டமைப்புக்களின் உரிமையாளர்கள் யார் என்பது தொடர்பில் போதிய வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை என்றும் அத்தகைய தகவல்களைப் பெறக்கூடியதாக இருப்பது ஊழல் மோசடிகள் நடைபெறாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமாகும் என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் துறைமுக நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள வங்கிகளின் நடவடிக்கைகளில் போதிய வெளிப்படைத்தன்மை பேணப்படாமையானது, நாட்டின் ஏனைய வங்கிகள் மீது பிரயோகிக்கப்படும் சட்டங்களிலிருந்து விலகிச்செயற்படுவதற்கு அவற்றுக்கு இடமளிக்கும் என்றும் அது நாட்டில் இரகசிய அதிகார வரம்பு ஒன்றை உருவாக்கும் என்றும் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த...

2025-04-18 02:55:21
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வடக்கு தலைவர்கள்...

2025-04-17 21:02:04