டுபாய் நகரில் ரமழான் மாதத்தில் யாசகம் செய்வதை தடுக்கும் ஒருங்கிணைந்த செயற்றிட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக டுபாயில் விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்யப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்தை கருத்திற்கொண்டு இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கையை தடுக்கும் வகையில் யாசகர்களை கைது செய்ய அங்கு ரோந்துப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் காரணமாக ரமழான் மாதத்தின் முதல் நாளிலேயே 12 யாசகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நன்கொடை வழங்க விரும்பும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் மாத்திரமே நன்கொடைகளை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும்  யாசகம் செய்பவர்களுக்கு நன்கொடை கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.