இண்டியானபொலிஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு ஃபெடெக்ஸ் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந் நாட்டு நேரப்படி இரவு 11.30 மணியளவில் இது தொடர்பில் பொலிஸார் செய்தி வெளியிட்டதாக இண்டியானாபொலிஸ் ஸ்டார் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள நிலையங்களில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனினும் இதன்போது எத்தனை பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் பாதிக்கப்பட்டனர் என்று தெளிவாக தெரியவில்லை.

ஃபெடெக்ஸ் என்பது ஒரு சர்வதேச கப்பல் அமைப்பாகும், இது நாடு மற்றும் உலகம் முழுவதும் தொகுப்புகள் மற்றும் அஞ்சல்களை அனுப்ப உதவுகிறது.