பாலஸ்தீனிய பயங்கரவாதிகள் தெற்கு இஸ்ரேல் மீது ராக்கெட் வீசிய சில மணிநேரங்களுக்குப் பின்னர், இஸ்ரேலிய இராணுவம் வெள்ளிக்கிழமை அதிகாலை காசா பகுதியில் வான் வழித்தாக்குதல்களை நடத்தியுள்ளது.

காசாவை ஆட்சி செய்யும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஹமாஸுடன் இணைக்கப்பட்ட பல தளங்களை போர் விமானங்கள் மற்றும் பிற விமானங்கள் தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் ஒரு ஆயுத உற்பத்தி நிலையம், ஆயுதங்களை கடத்த ஒரு சுரங்கப்பாதை மற்றும் ஹமாஸ் இராணுவ நிலை ஆகியவை அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

"இன்று மாலை (வியாழன்) காசா பகுதியிலிருந்து இஸ்ரேலிய பிரதேசத்தை நோக்கிய ராக்கெட் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தத்தின் மத்தியில், சமீபத்திய மாதங்களில் காசா பகுதியிலிருந்து வன்முறை ஏற்பட்டதில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.