கடந்த 24 மணிநேரத்தில் வீதி விபத்துக்களில் சிக்குண்ட 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 80 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 8 பேர் நேற்று நடந்த விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஆவர். ஏனையோர் அதற்கு முன்னர் நடந்த விபத்துக்களில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் ஆவார்.

அதேநேரம் நேற்று முன்தினம் வீதி விபத்துக்களில் சிக்குண்ட 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 74 பேர் காயமடைந்துள்ளதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக கடந்த 48 மணிநேரங்களில் வீதி விபத்துக்களில் சிக்குண்ட 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகளவானோர் மோட்டார் சைக்கிள் சாரதிகள் ஆவார்.