தி எக்பிரஸ் ட்ரிபியுன்

பாகிஸ்தான் அரசாங்கத்தின் கீழ் செயற்பட்டுவரும் பாரிய இரும்பு உற்பத்தி நிறுவனமான ‘பாகிஸ்தான் ஸ்டீல் மில்ஸ்’ நிறுவத்தை கொள்வனவு செய்வதற்கான போட்டி ஏலத்தில் பங்கேற்குமாறு அந்நாடு சீனாவை வலியுறுத்தியுள்ளது. 

அவ்வாறில்லையாயின் மூடிய தொழிற்றுறையைக் கொண்ட ‘சீனா - பாகிஸ்தான் பொருளாதார வாயில்’ கட்டமைப்பிலிருந்து விலக்குவதற்கான தனது முந்தைய முடிவை மீண்டும் பரிசீளிக்கும் நிலைமை ஏற்படும் என்றும் பாகிஸ்தான் சீனாவிடத்தல் வலியுறுத்தியது.

பாகிஸ்தானின் இரும்பு உற்பத்தி நிறுவனத்தினை அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் சீனாவுக்கு வழங்குவது குறித்து பாகிஸ்தான் நிதி அமைச்சர் ஹம்மத் அசார் மற்றும் பாகிஸ்தானுக்கான சீன தூதுவர் நோங் ரோங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் அரச அதிகாரியொருவர் தி எக்பிரஸ் ட்ரிபியுனிடம் தெரிவித்தார். 

‘சீனா - பாகிஸ்தான் பொருளாதார வாயிலின்’ 9ஆவது கூட்டு ஒத்துழைப்புக் குழுவின் கூட்டத்தின் போது, ‘சீனா - பாகிஸ்தான் பொருளாதார வாயில்’ கட்டமைப்பில் பாகிஸ்தான் இரும்பு உற்பத்தி நிறுவனம் சேருவதற்கு விரும்புவதாக சீனாவிடத்தில் பாகிஸ்தான் முன்மொழிந்ததோடு அதுதொடர்பான புரிதலும் ஏற்படுத்தப்பட்டது. 

‘சீனா - பாகிஸ்தான் பொருளாதார வாயில்’ கட்டமைப்பின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்து சர்வதேச முதலீட்டாளர்களுக்காக திறந்து விடப்படவில்லை. மாறாக சீன முதலீட்டாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏலம் எடுக்கும் போட்டிகளில் அவர்களே அதிகளவில் பங்கேற்பதற்கு முடியும் என்ற நிலைமையே உள்ளது.

 

எவ்வாறாயினும், ஒரு வருடத்திற்கு முன்னர் பாகிஸ்தானின் அப்போதைய நிதி ஆலோசகரான அப்துல் ஹபீஸ் இன்  ஆலோசனைகளின் அடிப்படையில் சீனா - பாகிஸ்தான் பொருளாதார வாயில் கட்டமைப்பில் பாகிஸ்தான் இரும்பு உற்பத்தி நிறுவனத்தினை உள்ளீர்த்தது. 

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட அந்த நிறுவனத்தை தற்போது பாகிஸ்தான் விற்க விரும்புவதால், ஏலப்போட்டியில் சீனாவை பங்களிக்கச் செய்து அந்நாட்டின் கீழ் அந்நிறுவனத்தினை கொண்டு செல்வதற்கு பாகிஸ்தான் ஆர்வமாக உள்ளது. 

எவ்வாறாயினும், இந்த விடயத்தில் பாகிஸ்தானின் இரும்பு உற்பத்திக்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் தொழில்துறை ஒத்துழைப்பு தொடர்பான கூட்டு செயற்குழுவின் கீழ் உருவாக்கப்படலாம் என்பதே சீனாவின் நிலைப்பாடாக உள்ளது. 

அந்த அடிப்படையில் பாகிஸ்தானின் இரும்பு உற்பத்தி நிறுவனத்தில் மெட்டாலர்ஜிகல் கோர்ப்பரேன் ஒஃப் சீனா லிமிடெட் என்ற நிறுவனம் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக இருந்தது. 

இருப்பினும் பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் ஏலப்போட்டியின் ஊடாகவே தனது இரும்பு உற்பத்தி நிறுவனத்தினை வழங்கும் என்று சீன அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் இரும்பு நிறுவகப் பரிவர்த்தனையை விரைவாக முடிப்பதற்கு ஆர்வமாக உள்ளார், ஆனால் இந்த விடயம் இன்னமும் மிக மெதுவான வேகத்திலேயே நகர்கிறது.

பாகிஸ்தான் இரும்பு உற்பத்தி நிறுவனத்தினை தனியார் மயமாக்கலுக்கான ஏலம் இந்த வாரம் நடைபெறும் என்று நிதியமைச்சர் ஹம்மத் அசார் தெரிவித்தார். அதற்கு அமைவாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சு அதன் ஏனைய விடயங்கள் தொடர்பான பணிகளை முன்னெடுத்திருந்தது.  அதற்கு அமைவாகவே சீன தூதுவருடன் பேச்சுக்களும் முன்னெடுக்கப்பட்டன. 

இவ்வாறான நிலையில் அடுத்த கூட்டு ஒத்துழைப்புக் குழுவின் கூட்டத்தில் தொழில்துறை ஒத்துழைப்பு தொடர்பான கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பாகிஸ்தான் ஆர்வமாக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன. 

இருப்பினும், சீன அதிகாரிகள் மற்றொரு ஒப்பந்தத்தில் பங்கேற்பதற்கு தயாராக இல்லை. கைபர் பக்துன்க்வாவில் ரஷாகாய்  செஸ், பஞ்சாபில் அல்லாமா இக்பால் செஸ் மற்றும் சிந்துவில் தபேஜி செஸ் ஆகிய மூன்று விசேட பொருளாதார வலயங்களிலும் முன்னேற்றத்தைக் காட்ட பாகிஸ்தான் முயற்சிக்கிறது. 

ரஷாகாய்  விசேட பொருளாதார வலயத்துக்கான மேம்பாட்டு ஒப்பந்தம் கடந்த ஆண்டு செப்டெம்பரில் முடிவுக்கு வந்தது, இருப்பினும், அதனுடன் தொடர்புடைய வசதிகளை முழுமையாக நிறுவுவதில் தாமதம் ஏற்பட்டதோடு முன்னுரிமைக் கொள்கைகளும் அறிமுகப்படுத்தப்பட்டதால் இழுபறி நீடிக்கிறது.

இவ்வாறான நிலையில், பாக்கிஸ்தானுக்கு ‘சீனா - பாகிஸ்தான் பொருளாதார வாயில்’ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பாகிஸ்தான் நிதி அமைச்சர் ஹம்மத் அசார் கூறியுள்ளதாக நிதி அமைச்சின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொழில்துறை உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், எரிசக்தி மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், பிராந்தியத்துடன் இணைப்பை மேம்படுத்துவதற்கும் பாரிய உதவிகளை அளிக்கும் என்று பாகிஸ்தான் நம்புகின்றது. 

‘சீனா - பாகிஸ்தான் பொருளாதார வாயில்’ பாகிஸ்தானிலும் அதற்கு அப்பாலும் ஏராளமான வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் நிதி அமைச்சர் அசா குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில் பாகிஸ்தானுக்கான சீனத் தூதுவர் ‘சீனா - பாகிஸ்தான் பொருளாதார வாயில்’ சீன நிறுவனங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பொதுவான நோக்கங்களை அடைவதற்கான பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதாகவும் பலப்படுத்துவதாகவும் இரு நாடுகளுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்யும் என்றும் கோடிட்டுக் காட்டினார்.

‘சீனா - பாகிஸ்தான் பொருளாதார வாயில்’  என்ற குடையின் கீழ் வரும் திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டியதன் அவசியத்தை பாகிஸ்தான் நிதியமைச்சர் வலியுறுத்தினார். திட்ட காலக்கெடுவை சந்திப்பதில் நேரம் சாராம்சமாக இருந்தது, இதனால் பொருளாதார நன்மைகள் இரு நாடுகளின் மக்களுக்கும் சென்றடையக்கூடும் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன் ‘சீனா - பாகிஸ்தான் பொருளாதார வாயில்’  மூலம் தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்துத் துறைகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்காக சீன தூதருக்கு ‘சீனா - பாகிஸ்தான் பொருளாதார வாயில்’ திட்ட ஆணையத்தின் தலைவர் முழுமையான ஒத்துழைப்புக்களை உறுதிப்படுத்தினார். 

அதேநேரம், கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக பாகிஸ்தானுக்கு சீனா வழங்கி வரும் ஒத்துழைப்புக்கும் நிதி அமைச்சர் அசார் நன்றிகளைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.