'கோஸ்டி' யாக பயமுறுத்தும் காஜல் அகர்வால்

Published By: Digital Desk 2

15 Apr, 2021 | 04:12 PM
image

முன்னணி நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் ஹாரர் கொமடி படமாக தயாராகியிருக்கும் 'கோஸ்டி'  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

பிரபுதேவா நடித்த 'குலேபகாவலி', ஜோதிகா நடித்த 'ஜாக்பாட் ' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கோஸ்டி'.

இதில் முன்னணி நடிகை காஜல் அகர்வால் கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் மூத்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்களான கேஎஸ் ரவிக்குமார், சுரேஷ் மேனன், லிவிங்ஸ்டன், மனோபாலா, நடிகர்கள் ஆடுகளம் நரேன், மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, சத்யன், நடிகை ஊர்வசி உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள். ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்திருக்கிறார்.

இந்தப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் பொலிசாகவும், பேயாகவும் நடித்திருக்கிறார். தமிழ் திரை உலகில் பேய்களையும், ஆவிகளையும் வைத்து யார் ஆகும் ஹாரர் கொமடி படங்களுக்கு என்றைக்கும் வரவேற்பு இருப்பதால், 'கோஸ்டி' படத்திற்கும் பாரிய அளவில் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'கோஸ்டி: படத்தின் ஃபர்ஸ்ட் லுக், அமைச்சராக பதவி ஏற்கும் அரசியல்வாதிகளின் குழு புகைப்படம் போல் அமைக்கப்பட்டிருப்பதால் இதற்கு இணையத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக லைக்குகளும், கமெண்டுகளும் கிடைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35